தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், எந்த ஒரு அரசியல் கட்சி சார்பில் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையில் கீழ் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தனியார் பள்ளிக்கு நிகராக கல்வி வழங்கப்பட வேண்டும் என ஏகப்பட்ட நலத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஏழை எளிய மாணவர்களுக்கு இந்த நலத்திட்டங்கள் சரியான முறையில் சென்றடைகிறதா என்பதை அடிக்கடி அரசு கண்காணித்து வருகிறது.
அது மட்டுமில்லாமல் ஏழை எளிய குழந்தைகள் கல்வி பயில வேண்டும் என்பதால், இதற்கு முன்னதாக வழங்கப்பட்ட மதிய உணவு திட்டத்துடன், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை, சென்ற மாதம் முதல் தொடங்கி, அதனை சிறப்பான முறையில் அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் பள்ளிகளில் சாதி, மத பாகுபாடு இருக்க கூடாது என்பதால் பல நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி வளாகங்களில் அரசியல் கூட்டம் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
அது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள பள்ளி வளாகங்களில் எந்த அரசியல் அமைப்பினருக்கும் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த உத்தரவை தொடர்ந்து எந்த பள்ளி வளாகங்களிலும் கூட்டங்கள் நடத்தப்படுவதில்லை என்பதை உறுதிபடுத்தவும் உத்தரவிட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
PF பயனாளர்களுக்கு குட் நியூஸ்: விரைவில் 81,000 ரூபாய் டெப்பாசிட்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வரிடம் கோரிக்கை!