News

Tuesday, 06 September 2022 12:49 PM , by: Deiva Bindhiya

Banana sales and price increase in Pollachi market

கோவை மாவட்டம், பொள்ளாச்சி காந்கி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் வாரத்தில் 2 நாட்கள் வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை வாங்குவதற்காக கேரள, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.

அவ்வப்போது பருவமழையால், வெளி மாவட்டங்களில் இருந்து குறைவான எண்ணிக்கையிலேயே வாழைத் தார்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. கடந்த மாதம் துவக்கத்தில் வரத்து குறைவாக இருந்தாலும், முகூர்த்த நாட்கள் இல்லாததால் வாழைத்தார் விற்பனை மந்தமாக இருந்துள்ளதுடன் குறைவான விலைக்கு விற்பனையானது.

தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை விழா களைகட்ட தொடங்கியுள்ளது. இதனால் கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து வாழைத்தார் வாங்கி செல்கிறார்கள். இதனால் விலையும் கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது. கடந்த வாரத்திலிருந்து முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து இருந்ததால், அனைத்து ரக வாழைத்தார்களுக்கும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடந்த ஏலத்தின் போது, சுற்றுவட்டார பகுதியிலிருந்து சுமார் 1900க்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

8ந்த தேதி ஓணம் பண்டிகை மற்றும் சுப முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து தொடர்ந்து வருவதால் அனைத்து ரக வாழைத்தார்களும் கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையானது.

இதில் செவ்வாழைத்தார் ரூ.55க்கும், பூவன் தார் ரூ.40க்கும். சாம்பராணி ரூ.40க்கும், மோரீஸ் ரூ.40க்கும், ரஸ்தாளி ரூ.45க்கும், நேந்திரன் ஒரு கிலோ ரூ.45க்கும், கேரள ரஸ்தாளி ஒரு கிலோ ரூ.50க்கும் என, கூடுதல் விலைக்கு விற்பனையானது.

மேலும் படிக்க:

வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி கடன் வசதி: MRK.பன்னீர்செல்வம் தகவல்!

"தேனீ வளர்ப்பு" குறித்து TNAU ஒரு நாள் பயிற்சி: விவரம் உள்ளே!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)