News

Friday, 09 July 2021 08:44 PM , by: R. Balakrishnan

Credit : Daily Thnadhi

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம், கோவிலூர், ஜி.எஸ்.காலனி, செல்லபாளையம், சங்கராபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.

சூறாவளிக்காற்றுடன் மழை

சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் அந்தியூர் பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான வாழைகள் (Banana)
இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்தியூா் பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.
மேலும் கரும்பு (Sugarcane), மக்காச்சோளம் (Maize) போன்ற பயிர்களும் சூறாவளிக்காற்றில் சாய்ந்து விழுந்தன.

விவசாயிகள் கவலை

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘நாங்கள் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் செவ்வாழை, கதலி, மொந்தன் போன்ற வாழைகளை பயிரிட்டு இருந்தோம். இந்த வாழைகள் அனைத்தும் நன்கு விளைந்து அடுத்த மாதம் அறுவடைக்கு (Harvest) தயாராக இருந்தன. இதனால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தோம். இ்ந்த நிலையில் திடீரென்று வீசிய சூறாவளிக் காற்றில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தது எங்களை கவலையடைய செய்துள்ளது.

இழப்பீடு

எங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த வாழைகளை நேரில் பார்வையிட்டு எங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதைத்தொடர்ந்து அந்தியூர் கிராம நிர்வாக அதிகாரிகள், வேளாண்மை துறை அதிகாரிகள் சூறாவளிக்காற்றினால் சாய்ந்த வாழைகளை நேரில் பார்வையிட்டு சேதமதிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

மேலும் படிக்க

மகசூலை அதிகரிக்க உதவும் பயிர் பூஸ்டர்கள்!

வாழை சாகுபடியில் அதிக மகசூல் பெற சிறந்த வழிமுறைகள்: வேளாண் அதிகாரி விளக்கம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)