பொதுவாகவே நம் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க நாம் வங்கிக்கு குறைந்தபட்ச தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டும். இது சேவைக் கட்டணம் போன்றது. ஒவ்வொரு மாதமும் அந்தத் தொகை உங்களுடைய கணக்கில் இருக்க வேண்டியது அவசியம். அது இல்லாவிட்டால் அபராதம் வசூல் செய்யப்படும்.
குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance)
குறைந்தபட்ச இருப்பு வரம்பு வெவ்வேறு வங்கிகளில் வெவ்வேறு வகையில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் பொதுமக்களுக்கு மத்திய அரசு சார்பில் ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டன. இந்த வகை கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பது குறித்து சமீபத்தில் நிதித்துறை இணையமைச்சர் பக்வந்த் காரத் பேசியிருந்தார். குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்காதவர்களின் கணக்குகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரத்து செய்ய வங்கிகளின் இயக்குநர் குழு முடிவெடுக்கலாம் என்றார்.
அண்மையில், நிதித்துறை இணையமைச்சர் பகவந்த் காரத்திடம், வங்கிக் கணக்கின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிப்பது தொடர்பான கேள்வி, ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டது. குறைந்தபட்சம் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைவான வைப்புத்தொகை இருக்கும் கணக்குகளுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்று வங்கிகளுக்கு உத்தரவிட மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர் பதிலளிக்கையில், ”இந்த முடிவை வங்கிகள்தான் எடுக்க வேண்டும். இந்த முடிவை வங்கிகள் எடுத்தால், அதன் பலன் அனைத்து பெரிய மற்றும் சிறிய வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும்” என்று கூறினார்.
மேலும் படிக்க
பொங்கல் பரிசு ரூ.1000: நாளை முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம்!
ஒரே பதவி ஒரே பென்சன் திட்டத்தில் திருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்!