பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், வாரத்தில் ஐந்து நாள் வேலையை அமல்படுத்தக் கோரியும், வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், வரும் 28, 29ம் தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து, மத்திய அரசு கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவித்தது.
வேலை நிறுத்தம் (Strike)
இரண்டு வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2021 டிசம்பரில், நாடு முழுதும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தற்போது மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது: பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது. ஐ.டி.பி.ஐ., வங்கியை தனியாருக்கு விற்க முயற்சிப்பதையும் எதிர்க்கிறோம்.
ஐந்து நாள் வேலை (Five Days Work)
அதே நேரம், எல்.ஐ.சி.,யில் வாரத்தில் ஐந்து நாள் வேலை அமலில் இருப்பது போல, வங்கிகளிலும் ஐந்து நாள் வேலை நடைமுறையை அமல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், எல்.ஐ.சி., மற்றும் வங்கி ஊழியர்கள் இடையே உள்ள அகவிலைப்படி முரண்பாட்டை களைதல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 28, 29ம் தேதிகளில், இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம்.
மேலும் படிக்க