News

Friday, 25 March 2022 03:25 PM , by: Elavarse Sivakumar

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக 4 நாட்கள் வங்கிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் முன்னெச்சரிக்கையாகத் தங்கள் நிதிப்பரிவர்த்தனையை முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள் வருகிற 28, 29-ந்தேதி ஆகிய இருநாட்கள் நாடு முழுவதும் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த போராட்டத்திற்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் ஆதரவு அளித்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் 5 லட்சம் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். மத்திய அரசின் தொழிலாளர் விரோதப்போக்கை கைவிடுதல் மற்றும் தனியார் மயமாக்குவதைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

40,000 பேர்

அனைத்து பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கிராம மற்றும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் இதில் பங்கேற்பதால் வங்கி பணிகள் கடுமையாக பாதிக்கும்.

இதன் காரணமாக, பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல், காசோலை பரிவர்த்தனை போன்றவை பாதிக்கும் என்று சங்க தலைவர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் 73 ஆயிரம் வங்கி கிளைகள் மற்றும் அதில் பணியாற்றும் 40 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

4 நாட்கள் முடக்கம்

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் 2 நாட்கள் நடைபெறுகின்ற நிலையில் வருகிற சனி (26-ந்தேதி) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (27-ந்தேதி) இரு நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறையாகும். அதனை தொடர்ந்து வேலை நிறுத்தம் நடைபெறுவதால் 4 நாட்கள் வங்கி பணிகள் முடங்கும் அபாயம் உள்ளது. ஏ.டி.எம். சேவையும் பாதிக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் நிதிப்பரிவர்த்தனையை முன்கூட்டியே முடித்துக்கொள்ளுமாறுக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க...

இதைக் குடித்தால், வெயிலுக்கும் Goodbye- அதிக Weightக்கும் Goodbye!

தூக்கத்தைத் தொலைத்தவரா நீங்கள்? இந்த ஒரே பானம் போதும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)