மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 July, 2020 8:56 AM IST

குறைந்தப்பட்ச இருப்புத் தொகை மற்றும் பணம் கையாளும் கட்டணத்தை வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் உயர்த்த வங்கிகள் முடிவு செய்துள்ளன.

உங்கள் சம்பளத்தை நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் கட்டாயம் வங்கியில் தான் போட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதன்படி அனைத்தும் வங்கிமயமாகிவிட்டது.  அனைத்தும் வங்கிமயமான பின்னர் நமக்கு அளிக்கும் ஒவ்வொரு சேவைக்கும் பணம் வசூலிக்க தொடங்கின வங்கிகள்.

அந்த வரிசையில் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச இருப்புத்தொகை

இதன்படி, வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தப்பட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்க வேண்டும். நகரம் மற்றும் கிராமப்புற கிளைகளுக்கு ஏற்ப இந்த இருப்பு தொகை மாறுபடுகிறது.

இதற்கு மேல் இருப்பு குறைந்தால் வங்கிகள் அபராதம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளன. அடிப்படை வங்கி கணக்குகள் சிலவற்றுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

வரும் 1ம் தேதி முதல் உயர்வு

இந்நிலையில், பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கோடக் மகிந்திரா வங்கி, ஆர்பிஎல் வங்கி ஆகியவை குறைந்த பட்ச சராசரி இருப்பு தொகை அளவு மற்றும் பணம் கையாள்வதற்கான கட்டணத்தை வரும் ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாங்க் ஆப் மகாராஷ்டிராவில் முன்பு, மாதாந்திர சராசரி இருப்பு தொகை ரூ.1,500 ஆக இருந்தது. இது தற்போது ரூ.2,000 ஆக உயர்த்தப்படுகிறது. இதற்கு கீழ் குறைந்தால் கிராமப்புற கிளைகளில் 20ரூபாயும், பெருநகரங்களில் 75 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படும். நடப்பு கணக்கு வைத்திருப்பவர்களின் மாத சராசரி இருப்பு ரூ.5000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல், பணம் எடுப்பது மற்றும் டெபாசிட் பெறுவது 3 முறை மட்டுமே இலவசம். அதற்கு மேல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.100 வசூலிக்கப்படும்.

இசிஎஸ் கட்டணம்

ஆக்சிஸ் வங்கி இசிஎஸ் பரிவர்த்தனைக்கு ரூ.25 வசூலிக்க உள்ளன. இதற்கு முன்பு கட்டணம் கிடையாது. மேலும், ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 ஆகிய குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை கையாள, 1000 எண்ணிக்கைக்கு கையாளுதல் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்பட உள்ளது.

பேலன்ஸ் பார்க்கக் காசு

கோடக் மகிந்திரா வங்கியில் சேமிப்பு கணக்கு மற்றும் சம்பள கணக்குகளில் 5 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு பிறகு பணம் எடுக்க ரூ.20, இருப்பு பார்ப்பது போன்றவற்றுக்கு ரூ.8.50, இதுபோல் கணக்குகளுக்கு ஏற்ப பணம் எடுப்பதற்கு 4வது பரிவர்த்தனைக்கு ரூ.100 வசூலிக்கப்பட உள்ளது.

வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அபராதத்தை உயர்த்த உள்ளன. மேலும் பல்வேறு சேவை கட்டணங்களையும் உயர்த்த உள்ளன. எனவே உங்கள் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை குறைவாக வைக்காதீர்கள். அப்படி செய்தால் உங்களுக்கு அபராதம் அதிகமாக விதிக்கப்படும். வேறு வங்கி ஏடிஎம் பக்கமும் போக வேண்டாம். அப்படி போனால் அதற்கும் அதிக கட்டணத்தை கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

மேலும் படிக்க...

எஸ்பிஐ வாரிவழங்கும் வேளாண் தங்கக் கடன் - எளிதில் பெறுவதற்கான வழிமுறைகள்

வெறும் 5ஆயிரம் மூதலீட்டில், அஞ்சலக முகவராக வாய்ப்பு - எளிய வழிமுறைகள்!

English Summary: Banks decide to raise fines from August
Published on: 18 July 2020, 08:56 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now