ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை அதிகரிப்பதாக வெளியிட்ட அறிக்கை மையின் ஈரம் காய்வதற்கு முன்னதாக, இரு வங்கிகள் தங்களுடைய வட்டியை அதிகரித்து விட்டதாக அறிவித்துள்ளன. ரிசர்வ் வங்கி அதன் குறுகிய கால கடன்களுக்கான, 'ரெப்போ' வட்டி விகிதத்தை, கடந்த 5 ஆம் தேதியன்று 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி அறிவித்தது.
வட்டி உயர்வு (Interest Raised)
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து, தனியார் துறையை சேர்ந்த ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மற்றும் பொதுத்துறையை சேர்ந்த 'பஞ்சாப் நேஷனல் வங்கி' ஆகியவை கடனுக்கான வட்டியை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, அதன் குறைந்தபட்ச வட்டியை 9.10 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும்; இந்த உயர்வு, 5 ஆம் தேதியிலிருந்து உடனடியாக அமலுக்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதே போல் பஞ்சாப் நேஷனல் வங்கியும் அதன் குறைந்தபட்ச வட்டி விகிதத்தை 7.90 சதவீதமாக உயர்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து, வங்கியின் வட்டி விகிதம் 7.40 சதவீதத்திலிருந்து, 7.90 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பதாக, பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்து உள்ளது.
மேலும் இந்த வட்டி உயர்வு, நாளைய தினம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக,வரும் நாட்களில் மற்ற வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
ரெப்போ வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி: பொதுமக்களுக்கு அதிக சுமை!
Fixed Deposit வட்டி அதிகரிப்பு: சீனியர் சிட்டிசன்களுக்கு குட் நியூஸ்!