News

Wednesday, 09 June 2021 07:58 PM , by: R. Balakrishnan

Credit : Maalai Malar

நெல்லுக்கான அடிப்படை ஆதார விலையை (Basic resource price) குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், விவசாயிகளின் வருமானம் ஓரளவு உயரும் என்பதில் ஐயமில்லை.

அடிப்படை ஆதார விலை

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் காணொலி மூலம் இன்று நடைபெற்றது. நெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 அதிகரிக்கப்படுவதாக மத்திய விவசாயத்துறை மந்திரி அறிவித்துள்ளார். ஒரு குவிண்டால் நெல்லுக்கு ஆதார விலை ரூ.1868ல் இருந்து ரூ.1940-ஆக அதிகரிக்கப்படுவதாக நரேந்திரசிங் தோமர் (Narendra Singh Thomar) கூறியுள்ளார்.

  • கம்பிற்கு அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.100 அதிகரிக்கப்பட்டு ரூ.2,250ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • எள்ளுக்கான அடிப்படை ஆதார விலையும் ஒரு குவிண்டாலுக்கு ரூ.452 அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவற்றிற்கான அடிப்படை ஆதார விலையும் ஒரு குவிண்டாலுக்கு ரூ.300 உயர்த்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லின் அடிப்படை ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், நெல் கொள்முதல் நிலையங்களை உரிய நேரத்தில் அனைத்து இடங்களிலும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.

மேலும் படிக்க

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)