இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 15 July, 2022 6:58 PM IST
Auto rickshaw

உலகமே வரவர ஒரு குப்பைத் தொட்டியாக மாறி வருகிறது. நிலம் தாண்டி கடல், கடலுக்கு அடியில் தங்கும் கழிவுகள் துருவப்பகுதிகளில் பனியோடு உறைந்து விடுகிறது. இந்த கழிவுகளை எப்படி முழுமையாக நீக்க முடியும் என்று யோசித்தால் அதற்கு வழிகளே இல்லை போல் தோன்றுகிறது. இதற்கு பத்தாமல் விண்வெளியில் மனிதன் சேர்த்துக்கொண்டிருக்கும் குப்பைகள் வேறு விண்வெளியையும் மாசுபடுத்திக்கொண்டு இருக்கிறது.

ஆபத்தான மாசுகளில் ஒன்று எலக்ட்ரிக் பேட்டரிகள். அதை மறுசுழற்சி செய்வது என்பது சாத்தியப்படாது. அதன் திறனை முழுமையாக கடைசி வரை பயன்படுத்த முயல்வதே இப்போதைக்கு பேட்டரிகள் எண்ணிக்கையை குறைப்பதற்கான, அதன் கழிவுகளைக் குறைப்பதற்கான வழி.

எலெக்ட்ரிக் வாகனங்களில் உள்ள பேட்டரிகள் காலப்போக்கில் படிப்படியாக பலவீனமடைகின்றன, மேலும் அவை அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியின் முடிவில் மாற்றப்பட வேண்டும். அத்தகைய பேட்டரிகளின் சில பாகங்கள் மீண்டும் பயன்படுத்தப்படும். ஆனால் ஒரு சில அபாயகரமானவை. சுற்றுச்சூழலில் அதிகம் மாசுபடுத்தும் தன்மை கொண்டதாக உள்ளன.

இப்போது, ​​பெங்களூரில் உள்ள ஒரு ஸ்டார்ட்அப் இந்த பழைய பேட்டரிகளை நல்ல பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. ஜெர்மன்-இந்திய கூட்டு ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘நுனம்’ இந்த பேட்டரிகளை மின்சார ரிக்ஷாக்களை இயக்குவதற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஆடி சுற்றுச்சூழல் அறக்கட்டளை நிதியளிக்கிறது.

ஆரம்பத்தில், பிரபலமான கார் தயாரிக்கும் நிறுவனமான ஆடியின் E-Tron பேட்டரிகளை ரிக்ஷாக்களுக்கு சக்தியூட்டுவதற்குப் பயன்படுத்தும் திட்டம் உருவாக்கப்பட உள்ளது. E-Tron ஆன்-ரோடு விலை ரூ. 1 கோடிக்கு மேல் உள்ளது மற்றும் 400 கிமீக்கு மேல் செல்லும் திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரியைக் கொண்டுள்ளது. ‘நுனம்’ இந்த பேட்டரியைப் பயன்படுத்தி சோதனை ஓட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

மேலும் படிக்க

FD Scheme: பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இனி அதிக லாபம் பெற முடியும்

English Summary: Battery-powered auto-rickshaws, possible?
Published on: 15 July 2022, 06:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now