மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 July, 2019 5:59 PM IST

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஒளிபரப்பு பொறியியல் சார்ந்த நிறுவனமான (BECIL) - ல் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .

 (BECIL) - ல் நிறுவனத்தில் காலியாக உள்ள திறன் சார்ந்த மற்றும் திறன் சாராத பணியாளர்கள், கன்சல்டன்ட் பணியாளர்கள், கணக்கியல் படித்தவர்கள் என பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடைப்படையில்  தேர்வு செய்யப்படவுள்ளனர்.

காலி பணியிடங்கள்

திறன் சார்ந்த பணியாளர்கள் - 1,336

திறன் சாராத பணியாளர்கள் - 1,342

கன்சல்டன்ட் பணியாளர்கள் - 04

அக்கவுண்ட்ஸ் எக்சிகியூடிவ் - 02

முக்கிய தேதிகள்

விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 10.07.2019

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.07.2019

விண்ணப்பக் கட்டணம்

பொது / பிற்படுத்தப்பட்ட வகுப்பு (ஓபிசி) பிரிவினர் - ரூ.500

எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.250

விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை

விண்ணப்பக் கட்டணத்தை Broadcast Engineering Consultants India Limited, payable at New Delhi என்ற வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். குறிப்பாக கீழ்க்காணும் தகவல்களின் அடிப்படையில் பதிவுக்கட்டணத்தை செலுத்தலாம்.

Account Holder's Name : BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED

Name of the Bank : CORPORATION BANK

Account No. : 510341000702746

IFSC : CORP0000371

Branch Address : CORPORATION BANK, CGO COMPLEX, LODHI ROAD, NEW DELHI-110003

ஊதிய விவரம்

  • பணியின் அடிப்படையில் ஊதியமானது மாறுபடும்.
  • திறன் சார்ந்த பணியாளர்கள் - குறைந்தபட்ச ஊதியமாக ரூ.9,381 நிர்ணயிக்க பட்டுள்ளது.
  • திறன் சாராத பணியாளர்கள் - குறைந்தபட்ச ஊதியமாக ரூ.7,613 நிர்ணயிக்க பட்டுள்ளது.
  • கன்சல்டன்ட்- ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை
  • அக்கவுண்ட்ஸ் எக்சிகியூடிவ் - குறைந்தபட்சம் ரூ.20,000 முதல் அதிகபட்சம் ரூ.30,000 வரை

வயது வரம்பு

திறன் சார்ந்த மற்றும் திறன் சாராத பணியாளர்கள் - 18 வயது முதல்  45 வயது வரை

பணிகளை பொறுத்து வயது வரம்பிலும், ஊதியதிலும் மாற்றங்கள் உண்டு.

கல்வித்தகுதி

  • திறன் சார்ந்த பணியாளர் பணிகளுக்கு,  எலக்ட்ரிக்கல் டிரேட் மற்றும் வையர்மேன் போன்ற துறையில்  ஐடிஐ சான்றிதழ் அல்லது டிப்ளமோ  சான்றிதழ் மற்றும்  குறைந்தபட்சமாக 2 வருட பணி அனுபவம் வேண்டும்.
  • திறன் சாராத பணியாளர் பணிகளுக்கு  குறைந்தபட்ச கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு மற்றும்    1வருட பணி அனுபவம் வேண்டும்.
  • கன்சல்டன்ட் பணிகளுக்கு  குறைந்தபட்சமாக பி.டெக் (எலக்ட்ரிக்கல்ஸ்) பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • அக்கவுண்ட்ஸ் எக்சிகியூடிவ் பணிகளுக்கு குறைந்தபட்சமாக பி.காம் அல்லது அதிகபட்சமாக எம்.காம் / எம்.பி.ஏ பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

 https://www.becil.com/vacancies அல்லது www.beciljobs.com - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும், இது குறித்த முழுமையான தகவல்களைப் பெற https://www.becil.com/uploads/vacancy/PVVNL10july19pdf5e206875495213e87fe49cd6f968b5d0.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: BECIL Recruitment 2019: 2864 Job Vacancies, Apply Online Before 25th July
Published on: 19 July 2019, 05:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now