பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) இன்வெஸ்டிகேட்டர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியான நபர்கள் ஆன்லைன் இணையத்தளமான becil.com அதாவது BECIL இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜனவரி 25, 2022 ஆகும்.
இதில் மொத்தம் 500 காலியிடங்களை நிரப்பும் பணியில் உள்ளது, இந்த நிறுவனம்.
அனைத்து பட்டதாரிகளுக்கும், இது ஒரு அற்புதமான வேலை வாய்ப்பாகும். எனவே, இறுதித் தேதிக்கு முன் விண்ணப்பிக்க மறவாதீர்கள்.
BECIL ஆட்சேர்ப்பு 2022: காலியிட விவரங்கள் (BECIL Recruitment 2022: Vacancy Details)
புலனாய்வாளர்: 350 பதவிகள்
மேற்பார்வையாளர்கள்: 150 பதவிகள்
என மொத்தம் 500 பணியிடங்கள் உள்ளன.
BECIL ஆட்சேர்ப்பு 2022: தகுதிக்கான அளவுகோல்கள் (BECIL Recruitment 2022: Eligibility Criteria)
கல்வி தகுதி (Educational qualification)
புலனாய்வாளர்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் மற்றும் கணினியில் நல்ல வேலை திறன் இருத்தல் வேண்டும். வரிசைப்படுத்தப்பட்ட மாநிலத்தின் பிராந்திய மொழி திறண்/ RO இன்றியமையாதது.
மேற்பார்வையாளர்கள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் மற்றும் கணினியில் திறனும் இருத்தல் வேண்டும். வரிசைப்படுத்தப்பட்ட மாநிலத்தின் பிராந்திய மொழி திறன்/ RO இன்றியமையாதது.
இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
BECIL ஆட்சேர்ப்பு 2022: தேர்வு செயல்முறை (BECIL Recruitment 2022: Selection Process)
தேர்வு செயல்முறை நேர்காணல்களைக் கொண்டிருக்கும். ஸ்கிரீனிங் மற்றும் இறுதி தேர்வுக்கான நேர்காணல்கள் நடத்தப்படும். எவ்வாறாயினும், எழுத்துத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கருதப்பட்டால், அது விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்படும். எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டால் அது ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் இருக்கலாம். இது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
BECIL ஆட்சேர்ப்பு 2022: விண்ணப்பக் கட்டணம் (BECIL Recruitment 2022: Application Fee)
விண்ணப்பக் கட்டணம் பொது, OBC மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவினருக்கு ரூ.500/- ஆகவும், SC/ST/EWS/PH பிரிவினருக்கு ரூ.350 ஆகவும் உள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய வழிமுறைகள்:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை வெற்றிகரமாக சமர்ப்பித்த பிறகு BECIL இணையதளத்தை தவறாமல் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த விளம்பரம் தொடர்பான சந்தேகங்களுக்கு 18005723603 என்ற எண்ணில் அழைக்கவும்.
குறிப்பு : இக்கட்டுரை விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பட்டப்படிப்புக்குப் பிறகு வேலை வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பு கவனம் செலுத்தி வெளியிடப்படுகிறது.
மேலும் படிக்க:
புதிதாக ஆடு வளர்ப்பு தொடங்க, கடன் உதவி பெறுவது எப்படி?
கிசான் கால்சேன்டர், விவசாயம் தொடர்பான சந்தேகங்களை தீர்க்க! முயற்சி