தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகிலுள்ள மார்க்கையன்கோட்டை சுற்று வட்டார கிராமப்புற பகுதிகளில் மிளகாய், சீனி அவரைக்காய், அவரைக்காய் , தக்காளி உள்ளிட்ட காய்கறி விவசாயத்தை செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீட்ரூட் விலை அதிகமாக இருந்ததால் இப்பகுதி விவசாயிகள் அதிகளவில் பீட்ரூட் பயிரிட தொடங்கினர்.
குறிப்பாக சின்னமனூர் பகுதியை சுற்றியுள்ள கன்னிசேர்வைபட்டி, சின்ராமகவுண்டன்பட்டி, சீப்பாலக்கோட்டை, காமாட்சிபுரம், முத்தலாபுரம், அய்யம்பட்டி, புலிக்குத்தி, தர்மத்துப்பட்டி, சிந்தலச்சேரி, சங்கராபுரம், குச்சனூர், பொட்டிப்புரம், சீலையம்பட்டி, வேப்பம்பட்டி, அய்யனார்புரம், அப்பிபட்டி, ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நாட்டு பீட்ரூட் மற்றும் தனியார் ரக பீட்ரூட் விதைகளைக் கொண்டு பீட்ரூட் சாகுபடியை செய்து வருகின்றனர்.
பீட்ரூட் விலை அதிகரித்து இருந்த நேரத்தில், 70 நாட்களில் அறுவடைக்கு வரும் குறுகிய கால பயிரான பீட்ரூட் சாகுபடி செய்தால் லாபம் பெறலாம் என்ற நோக்கில் சின்னமனூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் பிட்ரூட் விவசாயம் செய்தனர்.