மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 June, 2021 7:33 PM IST
Credit : Samayyam

வேப்பிலை சாற்றின் ஏராளமான நன்மைகளைப் பற்றி தெரிந்த நம் முன்னோர்கள், காலங்காலமாக அதை பயன்படுத்தி வருகின்றனர். நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் இருந்து சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பது வரை வேப்பிலை சாற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் காணப்படுகிறது. வேப்பிலை மரத்தின் பூக்கள், இலைகள், பட்டைகள் என ஒவ்வொரு பாகங்களும் நமக்கு பயன்படுகின்றன.

மருத்துவ குணம்

வேப்பிலை மரத்தின் குச்சிகள் பல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இந்த குச்சிகளைக் கொண்டு பல் துலக்கி வந்தால் பற்களில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுவதோடு பற்சொத்தை வராமல் தடுக்கிறது. இதன் பூக்கள் பித்தநீர் குழாய் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. வேப்பிலையில் ஆன்டி பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி பாராசிட்டிக் மற்றும் ஆன்டி டயாபெட்டிக் (Anti Diabetic) பண்புகள் காணப்படுகிறது. இதன் நன்மைகளை புரிந்த கிராமப்புற மக்கள் தங்கள் பிணிகளை போக்க வேப்பிலையை நிறைய வழிகளில் பயன்படுத்தி வருகின்றனர்.

செரிமான பிரச்சினை

தினமும் காலையில் வேப்பிலை சாற்றை குடித்து வருவது உங்க செரிமான பிரச்சினைகளை போக்க உதவுகிறது. இதிலுள்ள அஸ்ட்ரிஜெண்ட் பண்புகள் வாயு உருவாக்கத்தை தடுக்கின்றன. இதன் மூலம் வயிற்று வீக்கம், வாயு மற்றும் வயிற்று மந்தம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை குறைக்கிறது.

வேப்பிலை சாறு நிறைய தொற்றுகளுக்கு காரணமான பாக்டீரியா, வைரஸ், வைரல் மற்றும் பூஞ்சை இவற்றை எதிர்த்து போராட உதவுகிறது. காய்ச்சல், சலதோஷம் மற்றும் தொண்டை புண் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.

​காயங்கள் மற்றும் புண்களை ஆற்ற

வேப்பிலை சாற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், அல்சர், பெப்டிக் புண்கள், வாய்ப் புண்கள் போன்றவற்றை குறைக்கிறது. இதிலுள்ள பயோஆக்டிவ் சேர்மங்கள் திசு உருவாக்கத்தையும், சேதமடைந்த திசுக்களை மீட்கவும் உதவுகிறது. சீக்கிரமே காயங்களை ஆற்ற உதவுகிறது.

இரத்தத்தை சுத்திகரிக்க

வேப்பிலையிலும் நச்சுத்தன்மைகளை நீக்கும் சக்தி இருக்கிறது. வேப்பிலை சாற்றை (Neem Juice) தினமும் குடித்து வர உடம்பில் இருக்கும் நச்சுக்களை கழிவுகளை நீக்குகிறது. இது இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

​நீரிழிவு நோயை கட்டுப்படுத்த

வேப்பிலை சாற்றின் கசப்பான தன்மை காரணமாக இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. இது மாவுச்சத்தை குளுக்கோஸாக (Glucose) உடைத்து இரத்த சர்க்கரை ஏறாமல் உடனே ஏறாமல் தடுக்கிறது.

முடி வளர்ச்சியை தூண்ட

வேப்பிலை விதை சாற்றில் அசாதிராச்ச்டின் என்ற பொருள் உள்ளது. இது தலையில் ஏற்படும் பொடுகுத் தொல்லை, கூந்தல் உதிர்தல், பேன் தொல்லை இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. இதன் மூலம் முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

​சரும ஆரோக்கியம்

வேப்பிலை சாற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது. சரும பருக்கள், கொப்புளங்கள் இவற்றை போக்குகிறது. சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை காக்கிறது. வேப்பிலை எண்ணெய்யை பருக்களுக்கு எதிராக நீங்கள் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க

தினமும் ஒரு பச்சை வெங்காயம்: நன்மைகளோ ஏராளம்!

கருப்பட்டியில் கலப்படத்தை தடுக்க சிறப்பு குழு! உணவு பாதுகாப்புத்துறை தகவல்!

English Summary: Benefits of drinking Neem juice daily in the morning
Published on: 26 June 2021, 07:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now