உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் தனது Raider 125-ன் அப்டேட் வெர்ஷனை சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. TVS Raider 125-ன் இந்த லேட்டஸ்ட் ரேஞ்ச்-டாப்பிங் வேரியன்ட் ரூ.99,990 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது
SmartXonnect வேரியன்ட்டின் விலை டிரம் மாடலை விட ரூ.14,000 அதிகம் மற்றும் டிஸ்க் பிரேக் மாடலை விட ரூ.6,000 அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஹோண்டா SP125, ஹீரோ கிளாமர் 125 மற்றும் பஜாஜ் பல்சர் 125 ஆகியவற்றுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளது. இந்த லேட்டஸ்ட் பைக்கின் மிக முக்கியமான புதுப்பிப்பு ப்ளூடூத் கனெக்டிவிட்டி தான். வாய்ஸ் அசிஸ்டன்ஸ், டர்ன் பை நேவிகேஷன் போன்றவற்றுடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டியை பெறும் முதல் 125cc மோட்டார் சைக்கிள் இதுவாகும்.
இதற்கிடையே இந்த வேரியன்ட் டிஜிட்டல் எல்சிடி டிஸ்ப்ளேவிற்கு பதில் 5-இன்ச் டிஎஃப்டி டேஷை பெறுகிறது. இந்த லேட்டஸ்ட் வெர்ஷனையும் சேர்த்து Raider 125 இப்போது டிரம், டிஸ்க் மற்றும் ஸ்மார்ட்எக்ஸ்னெக்ட் ஆகிய மூன்று மாடல்களில் கிடைக்கிறது. புதிய வேரியன்ட் வேறு என்ன கொண்டு வந்துள்ளது என்பதை பார்க்கலாம். லேட்டஸ்ட் TVS Raider 125 பைக்கானது ப்ளூடூத் கனெக்டிவிட்டியை கொண்ட TFT கன்சோலுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ள நிலையில், இது இப்போது TVS-ன் SmartXonnect உடன் பொருத்தப்பட்டுள்ளது. எனவே இதனை ஸ்மார்ட் ஃபோனுடன் கனெக்ட் செய்ய முடியும்.
இது வாய்ஸ் கால்ஸ், எஸ்எம்எஸ், வாய்ஸ் அசிஸ்டென்ஸ், நோட்டிஃபிகேஷன் அலெர்ட்ஸ் , வானிலை முன்னறிவிப்பு மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் உள்ளிட்ட பல அம்சங்களை பெற நம்மை அனுமதிக்கிறது. இந்த TFT டேஷுடன் வரும் ஒரு சிறந்த அம்சம் என்னவென்றால், குறைந்த எரிபொருள் எச்சரிக்கை விளக்கு எரியும் போது, பைக் அருகிலுள்ள பெட்ரோல் பம்பிற்கு செல்வதற்கான வழியை காண்பிக்கும். TFT ஸ்கிரீனின் பிரைட்னஸை யூஸர்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.
மேம்படுத்த அம்சங்களை கொண்டிருக்கும் இந்த லேட்டஸ்ட் வெர்ஷன், எஞ்சின் ரீதியாக, மாறாமல் இருக்கிறது. TVS Raider 125 பைக்கானது ஆயில்-கூல்டு, 124.8cc சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் மூலம் 7,5000rpmல் 11.4hp பவரையும், 6,000rpmல் 11.2 Nm பீக் டார்க்கையும் வழங்குகிறது. மேலும் இந்த இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஃப்ரன்ட் ஃபோர்க்ஸ், மோனோஷாக், ஃப்ரன்ட் டிஸ்க் மற்றும் ரியர் டிரம் பிரேக் ஆகியவையும் மாறாமல் உள்ளன.
மேலும் படிக்க: