1,மிளகு மரபணு வங்கி அமைக்க நிதி ஒதுக்கீடு
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து 21 மே அன்று தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் உரையாற்றிய எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், ஏற்காட்டில் ரூ.3.50 கோடி மதிப்பில் மிளகு மரபணு வங்கி அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
2, இன்று முதல் ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்
கடந்த 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று முதல் செப்டம்பர் 30 தேதி வரை வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 20,000 வரை (10 நோட்டுகள்) வரை மாற்றி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
3,தனியார் பள்ளிகளிலும் கட்டாய மொழிப் பாடமாக தமிழ்
2024-25 கல்வியாண்டில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ் கட்டாய மொழிப் பாடமாக இருக்க வேண்டும் என உத்தரவு..
தமிழ்மொழியைக் கற்பிக்க தகுதியான ஆசிரியர்களை நியமிக்கவும் தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்..
4,தெற்கு ரெயில்வே ரெயில் சேவைகளை பெற ரூ.2000 நோட்டுகளை பயன்படுத்தலாம் என அறிவிப்பு
ரெயில் சேவைகளை பெற ரூ.2000 நோட்டுகளை பயன்படுத்தலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
5,ரூ.4 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை
அந்தியூர் வாரச்சந்தையில் வெற்றிலை விற்பனை நடைபெற்றது.
இந்த சந்தைக்கு அந்தியூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் வெற்றிலைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
ராசி வெற்றிலை கட்டு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.100-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.130-க்கும், பீடா வெற்றிலை குறைந்தபட்ச விலையாக ரூ.60-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.70-க்கும், செங்காம்பு வெற்றிலை கட்டு ஒன்றுக்கு ரூ.20-க்கு விற்பனை ஆனது. வெற்றிலை மொத்தம் ரூ.4 லட்சத்துக்கு விற்பனையானது.
6,இயற்கை ஒருபோதும் நமக்கு துரோகம் செய்யாது- மேற்குவங்காள ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ்
இன்று கிருஷி ஜாக்ரன் நிறுவனத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகைத் தந்த ஆளுநர், கிருஷி ஜாக்ரான் மேற்கொண்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு வெகுவாக பாராட்டினார். இதன் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பங்கேற்ற ஆளுநர் சி.வி. ஆனந்த் போஸ் பல கருத்துக்களை அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள், உயர் அலுவலர்கள் முன்னிலையில் பகிர்ந்து கொண்டார்.
"கடவுள்களின் தேசம் எனப் புகழ் பெற்ற கேரளாவைச் சேர்ந்தவன் தான் நானும். செழிப்பு, செல்வம் என்ற பெயரால் மனிதகுலம் இன்று விவசாயத்தை புறக்கணித்து வருகிறது. இயற்கை விவசாயத்துடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் கலந்த இயற்கை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் பசுமைப் புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
7,29-ந்தேதி விண்ணில் பாயும் ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட்!!
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
மேலும் படிக்க
போன்சாய் மரம் வளர்க்க ஆர்வம் மட்டும் போதுமா? இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க
நீல மஞ்சள் அதிக மகசூலுடன் விவசாயிகளின் வருவாயையும் திகரிக்கும்!