News

Saturday, 19 September 2020 09:54 AM , by: Elavarse Sivakumar

Credit : National Herald

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களை கண்டித்து நாடு முழுவதும் வரும் 25ம் தேதி முழுஅடைப்புப் போராட்டத்திற்கு, விவசாய சங்கம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேளாண் மசோதா (Agri bill)

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.

அமைச்சர் ராஜினாமா (Minister resigns)

இவற்றில் 2 மசோதாக்கள் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து, மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகினார். இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு விரோதமானவை எனக்கூறி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கொந்தளித்துள்ளனர்.  இதையடுத்து பஞ்சாப், அரியானா மாநிலங்களில் போராட்டங்கள் வலுத்துள்ளன.

பஞ்சாப்பில் உள்ள 10 விவசாய சங்கங்கள் மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளன.வரும் 25ம் தேதி பஞ்சாப் பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருகிறது.

இதுதொடர்பாக அகில இந்திய கிசான் சங்கார்ஸ் ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மசோதாக்களால், விவசாய விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்வது முற்றிலும் நிறுத்தப்பட்டு விடும். தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து அகற்றுவதாலும், தனியார் மண்டிகள் அமைக்கப்படுவதாலும் விவசாயிகளின் விலை பாதுகாப்பு பறிபோகும்.

எனவே, இந்த மசோதாவைக் கண்டித்து வரும் 25ம் தேதி நாடு தழுவிய பந்த் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

வேளாண் இளம் அறிவியல் படிப்பு- விண்ணப்பிக்க வரும் 5ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)