News

Tuesday, 08 December 2020 07:46 AM , by: KJ Staff

Credit : India Today

விவசாயிகள் சார்பில் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு (Bharath Banth) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். 3 வேளாண் சட்டங்களை (3 Agriculture Laws) கடும் அமளிக்கு மத்தியில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டத்தை எதிர்த்தும், அச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

6 ஆம் கட்டப் பேச்சுவார்த்தை:

விவசாயிகளுடன் மத்திய அரசு அடுத்தடுத்து நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. 3 வேளாண் சட்டங்களும் ரத்து (Cancel) செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் அனைவரும் தீவிரமாக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். வேளாண் சட்டங்களை நீக்க வாய்ப்பில்லை என்றும், அதில் திருத்தங்கள் (Corrections) வேண்டுமானால் செய்ய தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் இதுவரை நடந்த 5 சுற்று பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது.

பாரத் பந்த்:

விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் 8-ந் தேதி (இன்று) முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த் - Bharath Banth) டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர். விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு (Support) தெரிவித்திருக்கின்றன. 

Credit : Dinamani

போக்குவரத்துக்கு இடையூறு இல்லை:

முழு அடைப்பையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) தொ.மு.ச. உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் சார்பில் ஆதரவு அளிக்கப்படுகின்றன என்றும், அந்த தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பணிக்கு வரமாட்டார்கள் என்றும் அறிவித்துள்ளனர். அதேவேளை போக்குவரத்துக்கு (Transportation) எந்த வித இடையூறும் ஏற்படகூடாது என்பதில் போக்குவரத்து கழகம் உறுதியாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படும் 22 ஆயிரம் மாநகர பஸ்கள், அரசு விரைவு பஸ்கள், நகர பஸ்கள் என அனைத்து பஸ்களும் இன்று வழக்கம்போலவே இயங்கும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பணியில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். விடுப்பில் இருப்போரும் உடனடியாக பணிக்கு திரும்ப அந்தந்த கிளை மேலாளர்கள் சார்பில் போக்குவரத்து நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது. அதேவேளை இன்று பகலில் ஆம்னி பஸ் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இரயில் சேவை தொடரும்:

முழு அடைப்பு நடந்தாலும் ரெயில் போக்குவரத்தில் (Train Transportation) எந்த பிரச்சினையும் ஏற்படாது என்றே தெரிகிறது. வழக்கமான கால அட்டவணைப்படி ரெயில்கள் இன்று வழக்கம்போலவே இயக்கப்படும். முழு அடைப்பையொட்டி பயணிகள் பாதுகாப்பு (Passengers protection) கருதி கூடுதல் போலீசார் ரெயில் நிலைய வளாகங்களில் நிறுத்தப்பட இருக்கிறார்கள். அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் பஸ், ரெயில்கள் சேவையில் பாதிப்பு இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோக்கள் இயங்காது

நாடு முழுவதும் விவசாயிகள் இன்று அறிவித்திருக்கும் முழு அடைப்புக்கு எதிர்க்கட்சிகள், வணிகர் சங்கங்கள் (Chambers of Commerce) ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அதிகாரபூர்வமான அறிவிப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இன்று கடைகள் வழக்கம்போலவே திறக்கப்பட்டிருக்கும் என்றே தெரிகிறது. இன்று பெருமளவில் ஆட்டோக்கள் (Autos) இயங்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஆட்டோ தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், “ஆட்டோ டிரைவர்களில் 80 சதவீதம் பேர் தொழிற்சங்கங்களில் இணைந்திருக்கிறார்கள். அந்தவகையில் இன்று ஆட்டோக்கள் பெரும்பாலும் ஓடாது.

உஷார் நிலையில் காவல் துறை:

தமிழகத்தில் முழு அடைப்பையொட்டி, பொதுமக்கள் நலனுக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் காவல் துறை (Police) உஷாராக இருக்கிறார்கள். ஏற்கனவே கொரோனா (Corona) பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு (Lockdown) அமலில் இருப்பதால் போராட்டங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அதனால் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு (Protection) பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

தலைநகர் சென்னையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். முழு அடைப்பையொட்டி, பொதுமக்கள் நலனில் அக்கறை செலுத்தவேண்டும் என்றும், எந்த அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலும் போலீசார் முழு அக்கறையுடன் இருக்கிறார்கள். முழு அடைப்பையொட்டி வன்முறை சம்பவங்களில் யாரும் ஈடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், சட்டம்-ஒழுங்கு (Law-and-order) பிரச்சினை ஏற்பட்டுவிடாதபடி கவனமாக இருக்கவேண்டும், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி. திரிபாதி (DGP Tripathi) உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மேலும் முழு அடைப்பையொட்டி வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் யாரும் ஈடுபட கூடாது என்றும் போலீசார் எச்சரிக்கை (Warning) விடுத்துள்ளனர். 

Credit : Oneindia Tamil

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்:

விவசாயிகளின் போராட்டத்தை திறமையாக எதிர்கொள்வது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அறிவுறுத்தல் (Instruction) அனுப்பப்பட்டு உள்ளது. அதில் முக்கியமாக 3 விஷயங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.

  1. கொரோனா நோய்த்தொற்றை முன்னிட்டு போராட்டக்காரர்கள் போதுமான சமூக விலகலையும் (Social distance), சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றுகிறார்களா? என்பதை அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும்
  2. நாட்டில் எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பை கடுமையாக்க வேண்டும் என்றும், இது தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை (precautions) நடவடிக்கைகளையும் மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்கப்பட்டு இருக்கிறது.
  3. பாதுகாப்பு கடுமையாக்கப்படும் வேளையில் அமைதியை (Silence) பராமரிப்பதிலும் கவனமாக செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலி! காய்கறிகளின் விலை உயர்வு!

குறைந்தபட்ச ஆதரவு விலை வேண்டும்! புதிய சட்டம் இயற்ற விவசாயிகள் கோரிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)