பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு (Agricultural Laws) எதிர்ப்பு தெரிவித்து விவசாய அமைப்பினர் டெல்லியை முற்றுகையிடும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேளாண் சட்டங்கள் வாபஸ் (Agricultural Laws Withdraw)
கடந்த 19ம் தேதி தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்கள் மூன்றையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற முடிவு செய்து உள்ளதாக கூறினார். வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிப்பதற்காக சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார். பிரதமரின் அறிவிப்புகளை வரவேற்ற விவசாயிகள், சட்ட ரீதியாக வேளாண் சட்டங்களை ரத்து செய்வதுடன் தங்களது முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போராட்டத்தை திரும்பப் பெற முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதையடுத்து 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வகையில் மசோதா ஒன்றை ஒன்றிய அரசு தயாரித்துள்ளது. இந்த சட்ட முன்வடிவை வரும் 29ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்து விவாதத்திற்கு பிறகு நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
ஒப்புதல் (Permission)
இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் ஒன்றிய அரசின் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
வேளாண் சட்டம் வாபஸ்: அரசியல் தலைவர்கள் வரவேற்பு!
வேளாண் சட்டம் வாபஸ் ஆகியும் போராட்டத்தை தொடரும் விவசாயிகள்!