News

Wednesday, 06 July 2022 05:39 PM , by: R. Balakrishnan

Bio ethanol from Agricultural waste

இந்திய மருந்துப் பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஆல்பா-அமைலஸ் மற்றும் செல்லுலாஸ் போன்ற தொழில்துறை நொதிகளுக்கு அதிகளவில் தேவை இருந்து வருகிறது. இந்நிலையில் வேளாண்மை கழிவுகளில் இருந்து தொழில்துறை நொதிகள் மற்றும் மதிப்புக் கூட்டுத் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய 'பேசிலஸ் எஸ்பி பிஎம்06' எனப்படும் பாக்டீரியா எவ்வாறு உதவுகிறது என்பதை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தொழில்துறை நொதிகள் (Industrial enzymes)

சென்னை ஐஐடி உயிரி தொழில்நுட்பத்துறை பேராசிரியர் சத்தியநாராயணா என்.கும்மடி, ஆராய்ச்சி மாணவியான ரேகா ராஜேஷ் ஆகியோர் இதற்கான ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சியின் முக்கிய செயல்பாடுகள் குறித்து சத்தியநாராயணா கும்மடி கூறும்போது, குறைந்த செலவில் லிக்னோசெல்லுலோசிக் கழிவுகளை முன்பதப்படுத்துதல் ஏதுமின்றி பிரிக்கும் திறன் கொண்ட உயிரியை தனிமைப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் நொதிகளின் உற்பத்தி மற்றும் தொழில்துறை வளர்சிதை மாற்றங்களுக்காக மேற்கொள்ளப்படும் உயிரிச் செயலாக்கத்திற்கான செலவு குறையும்.

வேளாண் கழிவுகள் (Agriculture Waste)

வேளாண்மை கழிவுகளான கோதுமை தவிடு, ஜவ்வரிசி கழ்வு, அரிசி தவிடு ஆகிய குறைந்த விலையில் கிடைக்க கூடிய இந்த கழிவுகள் தொழில்துறை நொதிகளை உருவாக்கும் வகையில் அதிக ஆற்றலை கொண்டிருக்கும். புதுமையான ஒற்றை நுண்ணுயிரியை பயன்படுத்தி வெவ்வேறு வேளாண்மை கழிவுகளை சர்க்கரையாக்குதல் மற்றும் நொதித்தல் ஆகியவற்றை செய்ய முடியும். இருப்பினும் இதில் உள்ள சிக்கலான அமைப்புமுறை நொதிகளை நீர்த்து போக செய்து பணியை கடினமாக்குகிறது. இதற்கான பதப்படுத்தும் நடைமுறைகளும் அதிக செலவு பிடிக்கக்கூடியதாகும்.

இதனால் கரும்பு கழுவுகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பாசிலஸ் எஸ்பி பிஎம்06 பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். கரும்பாலைக் கழிவுகளில் இருந்து புதிய திரிபு ஒன்றைத் தனிமைப்படுத்துவதில் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கண்டுள்ளனர். புதுமையான ஒற்றை நுண்ணுயிரியைப் பயன்படுத்தி வெவ்வேறு வேளாண்மை கசடுகளை சர்க்கரையாக்குதல் மற்றும் நொதித்தல் ஆகியவற்றை செய்ய முடியும். புதுப்பிக்கத்தக்க உயிரி எரிபொருளை உருவாக்கும் வகையில் நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அணுகுமுறை மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.

மேலும் படிக்க

குறுவைத் தொகுப்புத் திட்டம்: புறக்கணிக்கப்படுவதாக நாகை மாவட்ட விவசாயிகள் புலம்பல்!

வறட்சியில் வளரும் ஈச்சம் பழம்: அமோக விளைச்சல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)