அம்பத்துார் குப்பை கிடங்கில் குவிந்துள்ள குப்பையை, 'பயோ மைனிங்' (Bio Mining) முறையில் இயற்கை உரமாக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சி, அம்பத்துார் மண்டலம், அத்திப்பட்டு அருகே, 6 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு உள்ளது. கடந்த, 23 ஆண்டுகளுக்கு முன், அம்பத்துார் நகராட்சி பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை, இங்கு இருப்பு வைக்கப்பட்டது. கடந்த, 2011ல் அம்பத்துார் நகராட்சி, 15 வார்டுகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட, மாநகராட்சியாக அங்கீகாரம் பெற்றது. அம்பத்துார் தொழிற்பேட்டை மற்றும் சிட்கோ தொழிற்பேட்டை உட்பட, அம்பத்துாரின், 15 வார்டுகளில் இருந்து தினமும், 350 டன் குப்பை சேகரிக்கப்பட்டு, இந்த குப்பை கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டது. இதனால், 50 அடி உயரத்திற்கு, 88 ஆயிரம் டன் அளவிற்கு குப்பை குவிந்தது. இதனால், குப்பை மலையை அகற்ற கோரிக்கை எழுந்தது.
ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம்: விவசாயிகள் வரவேற்பு!
பயோ மைனிங்
குப்பையை 'பயோ மைனிங்' மூலம் இயற்கை உரமாக்கும் பணி, 3 மாதத்திற்கு முன் மாநகராட்சி துவங்கியது. பிளாஸ்டிக், ரப்பர், கண்ணாடி, துணி ஆகியவை பிரிக்கப்பட்டு, சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது. இப்பணியை, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, 13ம் தேதி ஆய்வு செய்தார். அப்போது, குப்பையை இயற்கை உரமாக்கும் பணியை விரைவாக முடிக்கவும், அதன் பிறகு, இந்த இடத்தை பசுமை பூங்காவாக மாற்ற பரிசீலிக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து, ஓராண்டிற்குள் குப்பை அகற்றும்பணி முழுமையாக முடியும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.
பையோ மைனிங் முறையில் குப்பைகளை உரமாக்குவதால், விவசாயத்திற்கும் நன்மை பயக்கும். அது மட்டுமல்லாமல், குப்பைகள் சூழ்ந்திருந்த இடமும் சுத்தமாகி விடும்.
மேலும் படிக்க
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மத்திய அரசு தடை!