News

Friday, 03 December 2021 11:16 AM , by: Elavarse Sivakumar

பிறந்தநாளை நண்பர்களோடுக் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். அப்படி நினைத்துதான் இவரும் தனது பிறந்த நாளை, நண்பர்களுடன் கொண்டாடினார். இந்த சம்பவத்தில் விபரீதத்தால் உயிர் போனதே மிச்சம்.

பிறந்த நாள் கொண்டாட்டம் (Birthday celebration)

சமூக வலைதளத்தில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது இந்த வீடியோ. இதில், நண்பர்கள் நடுரோட்டில் கூடி கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடுகின்றனர். பின்னர் கேக்கை பர்த்டே பேபியின் முகத்தில் பூசித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். முடிவில் அவன் இறந்தது தெரிந்தஉடன் அதே இருசக்கர வாகனத்தில் உட்காரவைத்து அழைத்துச் செல்கின்றனர்.


சி.சி.டி.வி-யில் பதிவான வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், சாலையில் ஓராமாக நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடுகின்றனர். அந்த கூட்டத்தில் உள்ள ஒருவருக்கு அன்று பிறந்தநாள்.

கேக் வெட்டும் அந்த நபருக்கு நண்பர் ஒன்று கூடி பர்த்டே பாஷ் கொடுக்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மயக்க;k அடைந்துவிடுகிறார். உடனடியாகத் தண்ணீரை எடுத்து முகத்தில் அடிக்கின்றனர் அப்போது அவர் எழவில்லை.

ஆயிரம் டாலர் கேள்வி (Thousand dollar question)

இதனால் அச்சமடைந்த நண்பர்கள் உடனடியாக மயக்கமடைந்தவரை இருசக்கர வாகனத்தில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுடன், வீடியோ முடிவடைந்துவிடுகிறது.

இந்த சம்பவம் இணையத்தில் காண்போரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதேநேரத்தில்  இது உண்மையானக் காட்சியா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

வீடியோவின் துல்லியம், சிசிடிவி காட்சிகள் துல்லியமாக பதிவாகியுள்ளதால், இது மக்களை ப்ராங்க் செய்வதற்காக பதிவு செய்யப்பட்ட சம்பவமாக இருக்கலாம் என நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க...

1,235 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு!

3 வேளாண் சட்டங்கள் ரத்து குடிரசுத் தலைவர் ஒப்புதல்- போராட்டம் என்னவாகும்?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)