தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் அதிரடியாகச் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் திமுக விசுவாசிகளையும், கூட்டணிக் கட்சியினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
மக்களிடையேப் பிரபலமாக இருப்பவர்களுக்கு மிரட்டல் வருவதெல்லாம் வழக்கம்தான். இருந்தபோதிலும் ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்விடுத்துவிட்டு, தன்வேலையைப் பொறுமையாகச் செய்யும் நபர்களின் செயல்கள் எப்போது, வியப்பை அளிப்பதாக இருக்கிறது.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, மர்ம போன் ஒன்று வந்தது. மறுமுனையில் பேசிய மர்ம நபர், 'ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். அது சரியாக 5 மணிக்கு வெடிக்கும்' எனக் கூறிவிட்டு, இணைப்பை துண்டித்தார்.
இதையடுத்து, தேனாம்பேட்டை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. முதல்வர் வீட்டில், தீவிர சோதனை நடந்தது. வெடிகுண்டு ஏதுமில்லை. மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர் குறித்து விசாரித்தனர். மொபைல் போன் டவரை வைத்து ஆய்வு செய்து, மிரட்டல் விடுத்த, மரக்காணம் கூனிமேடு குப்பத்தை சேர்ந்த புவனேஷ், 21, என்பவரை கைது செய்தனர்.
ஏற்கனவே இது போன்று மிரட்டல் விடுத்ததாக, அபிராமபுரம், மரக்காணம், ராயப்பேட்டை, விருகம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. புவனேஷ் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது , போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் படிக்க...
கட்டிப்பிடி வைத்தியம்- உடல் ஆரோக்கியத்திற்கு அதிகப்பலன் தரும்!
வாட்டும் வெயிலிலும் உடலைக் குளுகுளுவென வைத்துக்கொள்ள வேண்டுமா?