கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் எந்தவித நேரடித் தேர்வு நடைபெறாத நிலையில், கடந்த மே 5-ம் தேதி 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. மாணவர்களின் மனஉளைச்சலை போக்கும் விதமாக வேதியியல், உயிரியல், இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கு இடையே 3 நாட்கள் இடைவெளி வழங்கப்பட்டிருந்தது.
+2 பொதுத்தேர்வு (+2 Public Exam)
கடந்த 28-ம் தேதி வரை நடைபெற்ற இத்தேர்வில் 8 லட்சத்து 22 ஆயிரத்து 684 பள்ளி மாணாவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் 23-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு வேதியியல் வினாத்தாளில் சில குளறுபடிகள் இருந்ததாக வந்த புகாரை அடுத்து, கூடுதல் மதிப்பெண்கள் வழங்க தேர்வுகள் இயக்ககம் முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வேதியியல் பாட வினாத்தாளில், "பகுதி 1-ல் கேள்வி எண் 9 அல்லது கேள்வி எண் 5-ஐ எழுதியவர்களுக்கு முழு மதிப்பெண்கள் மற்றும் பகுதி 2-ல் கேள்வி எண் 29-ஐ எழுதியவர்களுக்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
மாணவர்கள் மேற்கொண்ட வினாவிற்கான விடையினை எழுத முயற்சி செய்திருப்பின் அதற்கான முழுமையான மதிப்பெண் வழங்கப்படும்.
வினா எண் தவறாக இருந்ததாக புகார் எழுந்த நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!
தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.! வெளியான முக்கிய அறிவிப்பு.!