News

Tuesday, 17 August 2021 08:33 PM , by: Elavarse Sivakumar

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வழங்கப்படும் முட்டையுடன் ரொட்டியையும் சேர்த்து வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

பள்ளி இடைநிற்றல்

பள்ளிக்கு வரும் மாணவர்கள் பசியோடு பாடம் கற்பதைத் தடுக்கவும், குடும்ப வறுமைக்காக படிப்பை இடையில் நிறுத்திக்கொள்ளும் நிலையை அடியோடு மாற்றவே அரசு ஆரம்பம் முதல் போராடி வருகிறது.

அந்த வகையில், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்க அரசுப்பள்ளிகளில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் சராசரியாக 50 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் இந்த திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.800 கோடி வரை செலவிடுகிறது. தற்போது பள்ளிகள் மூடியுள்ள நிலையில் மாணவர்களுக்கு அரசின் சார்பில் அரிசி உள்ளிட்ட உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் குடும்ப பொருளாதார சூழலால் மாணவர்களின் இடைநிற்றலும் அதிகரித்துள்ளது.

இதனைத் தவிர்க்க சத்துணவில் முட்டையுடன் சேர்த்து ரொட்டி வழங்கலாமா? என்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை மேற்கொண்டு வருகிறது.

இடைநிற்றல் அதிகரிப்பு (Intermittent increase)

குறிப்பாகப் பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்கள் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதன் காரணமாக பள்ளிகளில் இடைநிற்றல் கணிசமாக அதிகரித்து வருகிறது.

எனவே குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சத்துணவு திட்டத்தில் முட்டையுடன் சேர்த்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ரொட்டி வழங்க அரசு ஆலோசித்து வருகிறது. இருப்பினும் இது தொடர்பாக முதலமைமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவு எடுப்பார் எனத் தெரிகிறது.

மேலும் படிக்க...

தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு - முதற்கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்புகள் வரை செயல்படும்!

சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)