1.அனைத்து நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்!
அனைத்து வகையான தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது.
இதற்கு முன் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2.தமிழகத்தின் மின் தேவை 19000 MV எட்டியது!
தமிழக எரிசக்தி துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, தமிழக வரலாற்றில் முதல்முறையாக ஏப்ரல் 20ஆம் தேதி அதிகபட்சமாக 42.37 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாக ட்வீட் செய்துள்ளார்.
தமிழகத்தில் கடும் வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், மாநிலத்தின் உச்ச மின் தேவை 19,000 மெகாவாட்டை தாண்டியது, இது வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். தமிழக எரிசக்தி துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, தமிழக வரலாற்றில் முதல்முறையாக ஏப்ரல் 20ஆம் தேதி அதிகபட்சமாக 42.37 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாக ட்வீட் செய்துள்ளார்.
3.தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சி இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,840 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.5,605-க்கு விற்பனையாகிறது.
4. ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் ஆண்டில் 2 லட்சத்து 40 ஆயிரம் டன் வேளாண் விளை பொருட்கள் விற்பனை செய்து சாதனை.
ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம், ஒரே ஆண்டில் 2 லட்சத்து 40 ஆயிரம் டன் வேளாண் விளை பொருட்கள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக, ஈரோடு மாவட்ட வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சாவித்திரி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் அவர் தெரிவித்ததாவது ,ஈரோடு மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ், 18 ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள், 2 துணை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள், 2 துணை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, மஞ்சள், தேங்காய், கொப்பரை தேங்காய் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வேளாண் விளை பொருட்களை ஏல முறையில் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
கடந்த 2022 -2023-ம் நிதி ஆண்டில் அதாவது ஒரே ஆண்டில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 63 டன் வேளாண் விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசுக்கு ரூ.14 கோடியே 24 லட்சம் வருவாய் கிடைத்தது. மேலும் 80 ஆயிரத்து 101 டன் விளை பொருட்களை பரிவர்த்தனை மற்றும் இருப்பு வைத்து, பொருளீட்டு கடனாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ரூ.1 கோடியே 11 லட்சம் கடன் பெற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
5.ரேஷன் அல்லாத பொருட்களை வாங்க பொதுமக்களை எக்காரணத்தைக் கொண்டும் கட்டாயப்படுத்தக்கூடாது -உணவு மற்றும் கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவு
ரேஷன் அல்லாத பொருட்களை வாங்க பொதுமக்களை எக்காரணத்தைக் கொண்டும் கட்டாயப்படுத்தக்கூடாதுஎன உணவு மற்றும் கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மார்ச் மாத முடிவில் 13 ஆயிரத்து 443 கோடி ரூபாய்க்கு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ரேசன் கடைகளில் மக்கள் விரும்பும் பொருட்களை வாங்கலாம் என்றும், விருப்பமில்லை என்றால் வாங்கத் தேவையில்லை என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.
6.ஜல்லிக்கட்டிக்கு ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்து கிராம கமிட்டி மூலம் டோக்கன் வழங்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
“தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விழாக்களில் ஆன்லைன் மூலமாக வழங்கும் டோக்கன் முறையை ரத்து செய்து பாரம்பரிய முறைப்படி, கிராம கமிட்டி மூலம் டோக்கன் வழங்க வேண்டும்".
சட்டப்பேரவையில் மாண்புமிகு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்.
7.தண்ணீருக்கு பட்ஜெட் அமைத்த கேரளா
கோடைகால தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கேரளா முதல் முறையாக தண்ணீர் பட்ஜெட்டை தொடங்கியுள்ளது.
'இனி ஞான் ஒழுகத்தே' (இப்போது பாயட்டும்) திட்டத்தின் மூன்றாம் கட்டத் தொடக்கத்துடன், பொது நீர் பட்ஜெட்டை முதல்வர் பினராயி விஜயன் திங்கள்கிழமை வெளியிட்டார்.
அங்குள்ள குறிப்பிட்ட பகுதிகளில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில், தண்ணீர் பட்ஜெட்டை ஏற்றுக்கொண்ட முதல் மாநிலமாக கேரளா திங்கள்கிழமையிலிருந்து திகழ்கிறது.
இத்திட்டத்தின் முதல் கட்டம் 94 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 15 தொகுதி பஞ்சாயத்துகளை உள்ளடக்கியது.
இந்த பட்ஜெட் திட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பாசன வலையமைப்புகளை சீரமைக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது.
மேலும் படிக்க