மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 March, 2023 6:01 PM IST
Breaking: 12-hour internet shutdown, the operation to arrest Khalistani Amritpal Singh

காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதற்காக, பஞ்சாபில் மொபைல் மற்றும் இணையதள சேவைகள் திடீரென நிறுத்தப்பட்டன.

பஞ்சாபின் பல மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி வரை மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

காலிஸ்தான் சார்பு அமைப்பான வாரிஸ் தலைவர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக பஞ்சாப் மாநில காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காலிஸ்தான் அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் தொடங்கியதால் பஞ்சாபில் இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பஞ்சாபின் பல மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி வரை மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

“அனைத்து மொபைல் இணைய சேவைகள், அனைத்து SMS சேவைகள் (வங்கி மற்றும் மொபைல் ரீசார்ஜ் தவிர), மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளில் வழங்கப்படும் அனைத்து டாங்கிள் சேவைகள், குரல் அழைப்புகள் தவிர, மார்ச் 18 (12:00 மணி) முதல் பஞ்சாபின் பிராந்திய அதிகார வரம்பில் நிறுத்தப்படும்.

பொது பாதுகாப்பு நலன் கருதி,” என உள்துறை மற்றும் நீதித்துறை, பஞ்சாப் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: 

NBCC ஆட்சேர்ப்பு 2023 – 08 எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கு விண்ணப்பிக்க இதோ லிங்க்!

கடந்த மாதம், அம்ரித்பாலின் நெருங்கிய உதவியாளர் லவ்பிரீத் தூபனை விடுவிக்கக் கோரி, அமிர்தசரஸின் புறநகரில் உள்ள அஜ்னாலா காவல் நிலையத்தில் அம்ரித்பால் ஆதரவாளர்கள் காவல்துறை அதிகாரிகளுடன் மோதினர்.

பிப்ரவரி 23 அன்று, ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் அஜ்னாலா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாள்கள் மற்றும் உயர் ரக துப்பாக்கிகளைக் காட்டி ஒருவரைத் தாக்கினர்.

அதன்பிறகு, கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட லவ்ப்ரீத், தூபானை விடுவிக்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் போலீஸாரை மிரட்டியுள்ளார்.

ஆதரவாளர்கள், வாள்கள் மற்றும் துப்பாக்கிகளை காட்டி, அஜ்னாலா காவல் நிலையத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த போலீஸ் தடுப்புகளை அழித்துள்ளனர்.

போலீஸ் விண்ணப்பத்தின் மீது அஜ்னாலா நீதிமன்ற உத்தரவின் பேரில் லவ்ப்ரீத் சிங் பிப்ரவரி 24 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் பகவந்த் மான், இந்த "1000 பேர்" பஞ்சாபை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும், மாநிலத்தில் அமைதியை சீர்குலைப்பதற்காக "பாகிஸ்தானிடம் இருந்து பணம் பெறுகிறார்கள்" என்றும் குற்றம் சாட்டினார்.

இந்த அறிக்கை ANI செய்தி சேவையிலிருந்து பெறப்பட்டது.

இந்த சேவை பஞ்சாபை சுற்றியுள்ள மற்ற மாநிலங்களை, எந்த விதத்திலும் பாதிக்காது.

மேலும் படிக்க:

NBCC ஆட்சேர்ப்பு 2023 – 08 எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கு விண்ணப்பிக்க இதோ லிங்க்!

காளான் வளர்ப்பு மற்றும் கால்நடை விவசாயிகளுக்கு இலவச பயிற்சி

English Summary: Breaking: 12-hour internet shutdown, the operation to arrest Khalistani Amritpal Singh
Published on: 18 March 2023, 06:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now