News

Tuesday, 01 November 2022 07:52 PM , by: T. Vigneshwaran

Breaking News

சென்னை ஆர்.கே.நகர் மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த கூட்டத்தில் பேசிய, திமுக பேச்சாளரும், சென்னை தெற்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளருமான சைதை சாதிக், பாஜக பெண் நிர்வாகிகளான நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம் மற்றும் கவுதமி குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளானது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்தது. திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழியும் நடிகை குஷ்புவிடம் பகிரங்கமாக மன்னிப்பும் கோரினார். இதனை தொடர்ந்து தமிழக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சைதை சாதிக் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில்,திமுக விர்வாகி சைதை சாதிக்கை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து, சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி மாநிலத் பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் அண்ணாமலை கைதை கண்டித்து கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க:

விவசாயிகளுக்கு வேளாண்மை அறிவியல் கண்காட்சி

தொடர் மழையால் நிரம்பிய கண்மாய்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)