News

Friday, 28 January 2022 08:13 PM , by: T. Vigneshwaran

Karnataka CM Yedayurappa

கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக பிரமுகருமான பிஎஸ் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை செய்து கொண்டதாக செய்தி கசிந்துள்ளது.

30 வயதான சௌந்தர்யா, பெங்களூருவில் எம்எஸ் ராமையா மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். காவல்துறையினரின்படி, அவர் தனது கணவருடனும், ஆறு மாத குழந்தையுடன் மவுண்ட் கார்மல் கல்லூரிக்கு அருகிலுள்ள ஒரு உயர்மட்ட குடியிருப்பில் வசித்து வந்தார். அவரது கணவரும் ஒரு மருத்துவர்.

சௌந்தர்யாவுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது ம்குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை காலை அவர் இறந்த செய்தி கிடைத்தது. இறப்புக்கான காரணத்தை அறிய அவரது உடல் இப்போது உடற்கூராய்வுக்காக அரசு நடத்தும் பௌரிங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சௌந்தர்யா எடியூரப்பாவின் முதல் மகள் பத்மாவின் மகளாவார். இந்த செய்தி அவரது குடும்பத்தினரை வெகுவாக பாதித்துள்ளது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வரான பிஎஸ் எடியூரப்பாவுக்கு தனது அமைச்சரவை சகாக்களுடன் மருத்துவமனைக்கு விரைந்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் படிக்க:

வைரல் செய்தி: 138 குழந்தைகளின் தந்தை 66 வயது முதியவர்!

நாவல் பழம் பயிரிடுவதற்கு ரூ.10 லட்சம் அரசு மானியம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)