நாமக்கல்லில் கடந்த மாதம் கறிக்கோழி விலை வேகமாக உயர்ந்து உயிருடன் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கறிக்கோழி விலை மாற்றம் இல்லாமல் கடந்த 9-ம் தேதி ஒரு கிலோ கறிக்கோழி உயிருடன் 108 ரூபாயில் இருந்து 6 ரூபாய் விலை குறைந்து உயிருடன் ஒரு கிலோ 102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதன் பிறகு கடந்த 10 நாட்களாக விலையில் மாற்றம் இன்றியே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் கறிக்கோழி கிலோ ஒன்றுக்கு 14 ரூபாய் விலை குறைக்கப்பட்டு உயிருடன் 88 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
விலை சரிவு குறித்து கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூறுகையில், “பொங்கல் பண்டிகை முடிவடைந்த நிலையில் விற்பனை குறைந்துள்ளது. அதே வேளையில் கேரளாவில் பறவை காய்ச்சல் அச்சம் காரணமாக கறிக்கோழி விற்பனை கடுமையாக சரிவடைந்து அதிகளவு தேக்கம் அடைந்ததால் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விலை குறைக்கபட்டுள்ளது” என தெரிவித்தனர்.
மேலும் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ கறிக்கோழி 140 முதல் 160 வரை விற்பனை செய்யப்படலாம். அதேபோல் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த 11 நாட்களாக விலை மாற்றமின்றி 5 ரூபாய் 65 காசுகளாகவே நீடித்து வருகிறது. இதுவே கோழிப்பண்ணை வரலாற்றில் அதிகபட்ச விலை ஆகும். சென்னையில் முட்டை ஒன்று சில்லறை விற்பனையில் 6 ரூபாய் முதல் ரூ 6.15 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: