ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா தற்போது மூன்றாவது பதக்கத்தை கைப்பற்றி உள்ளது. இன்று நடந்த குத்துச்சண்டை அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா (Lovlina) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
வெண்கலப் பதக்கம்
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா (69 கி.கி.,) வெண்கலப் பதக்கம் வென்றார். அரையிறுதியில் 0-5 என, துருக்கி வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.
ஜப்பானில் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் பெண்களுக்கான குத்துச்சண்டை 'வெல்டர் வெயிட்' எடைப் பிரிவு (69 கிலோ) அரையிறுதியில் இந்தியாவின் லவ்லினா, நடப்பு உலக சாம்பியன் துருக்கியின் புசனெஸ் சர்மெனெலி மோதினர். இதில் லவ்லினா 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
3வது பதக்கம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 3வது பதக்கமானது. ஏற்கனவே பளுதுாக்குதலில் மீராபாய் சானு (வெள்ளி), பாட்மின்டனில் சிந்து (வெண்கலம்) பதக்கம் வென்றிருந்தனர்.
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச் சண்டையில் இந்திய நட்சத்திரம் மேரி கோமுக்குப் பிறகு ஒலிம்பிக் வெண்கலம் வென்று புதிய நட்சத்திரமானார் அசாமைச் சேர்ந்த இந்திய சிங்கப்பெண் லவ்லினா போர்கோஹெய்ன்.
மேலும் படிக்க
ஏடிஎம் கட்டணம் அதிகரிப்பு: ஆகஸ்ட் 1 முதல் அமல்!
ஒலிம்பிக் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து இந்திய மகளிர் ஆக்கி அணி வெற்றி!