பாஜக அரசு இன்று முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. இன்று முதல் முறையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாரம்பரிய முறைப்படி ஆவணங்களை கொண்டு வந்தார்.
இரண்டாவது முறையாக மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு இன்று முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
வழக்கமாக முன்னாள் நிதி அமைச்சர்கள் தாக்கல் செய்யவரும் போது ஆவணங்களை சிவப்பு நிற லெதர் சூட்கேஸில் தான் எடுத்து வந்தனர். ஆனால் இம்முறை சிறு மாற்றத்துடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்திய பாரம்பரிய முறைப்படி ஆவணங்களை கொண்டு வந்தார்.
நம் பாரம்பரிய முறையில் ஆவணங்களையும், கணக்குகளையும் ஒரு துணியில் கட்டி வைத்திருப்பார்கள். இதை இந்தியில் "பஹி காட்டா" என்பர். மேலும் மேற்கத்திய பாரம்பரிய அடிமைத்தனத்தின் புறப்பாடுதான் இந்த "பஹி காட்டா"
ஒரு சிவப்பு துணியில் மஞ்சள்,சிவப்பு நிற ரிப்பன் கட்டி அதன் மேல் இந்திய அரசின் சின்னம் வைக்கப்பட்டு பாரம்பரிய முறைப்படி முதல் முறையாக ஆவணங்களை கட்டிக்கொண்டு வந்தவர் முழுநேர பெண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
K.Sakthipriya
Krishi Jagran