News

Friday, 02 September 2022 02:57 PM , by: Deiva Bindhiya

Bullish gold prices fell by Rs.120

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.இந்நிலையில் இன்றைய தங்கம் விலை என்னவாக இருக்கும் என்பதில் மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். எனவே இன்றைய தங்கம் விலை அறிந்திடுங்கள்.

நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.37,920-க்கு விற்கப்பட்ட நிலை, இன்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.37,800-க்கு விற்கப்பட்டு வருகிறது. அதே நேரம், நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,740-க்கு விற்கப்பட்டது குறிப்பிடதக்கது. எனவே இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,725-க்கு விற்கப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில் வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.60.40-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ரூ.60.50-க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.60,500-க்கு விற்கப்படுகிறது.

நீண்ட மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியதை கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தற்போது தங்கம் விலை 37 ஆயிரம் எட்டியது, மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. 

வீட்டிலிருந்த படி, தங்கம் விலை அறிய; (Find out the price of gold at home)

வீட்டிலிருந்தபடியே, தங்கத்தின் விலைகளை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, 8955664433 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்தால் போதும், உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி வரும், அதில் சமீபத்திய கட்டணங்களை நீங்கள் பார்த்து பயனடையலாம்.

மேலும் படிக்க:

தென்னையில் ஊடுபயிர் செய்ய ரூ.26,250வரை மானியம் பெறலாம்!

12-ந்தேதி முதல் கால்நடை மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)