News

Monday, 24 May 2021 08:10 PM , by: R. Balakrishnan

Credit : Daily Thandhi

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தா.பழூர் வரை உள்ள டெல்டா பகுதிகளில் கடந்த மாதம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், அந்தந்த மையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை, அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

மழையில் நனையும் நெல் மணிகள்

கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் நெல்மூட்டைகள் நனையாமல் இருக்க, அந்த மையங்களில் இருந்த தார்ப்பாய்களை கொண்டு மூடி உள்ளனர். அதிக அளவு மழை பெய்தால் மூட்டைகளுக்கு உள்ளே தண்ணீர் புகுந்து நெல்மணிகள் (Paddy) சேதமடையும் சூழல் உள்ளது. குறிப்பாக ஸ்ரீபுரந்தான் நெல் கொள்முதல் நிலையத்தில் மழையிலும், வெயிலிலும் நெல் மூட்டைகள் கிடப்பதால், முளைத்து விரைவில் சேதமடையும் என்று தெரிகிறது.

கோரிக்கை

கடந்த ஆண்டு இதேபோல் ஒரு சில மையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, சேதமடைந்து மூட்டையின் உள்ளேயே நெல்மணிகள் முளைத்துவிட்டது. அதேபோல் இந்த ஆண்டும் நடந்து விடக்கூடாது என்றும், மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட நெல்மூட்டைகள் சேதம் அடையாமல் தடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க

தென்னை விவசாயத்தைச் சேர்ந்த 10,000 பேர் வேலையிழப்பு!

ஊரடங்கில் வேளாண் இடுபொருட்கள் தடையின்றி கிடைக்க வழிவகை! அதிகாரி தகவல்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)