அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனர்கள், பணியின்போது மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக, பஸ் ஓட்டுனர்களின் கவனக்குறைவால் விபத்துகள் அதிகரித்துள்ளன. இதுகுறித்த ஆய்வில், பணியின்போது, ஓட்டுனர்கள் மொபைல் போனில் பேசுவதும் காரணம் என, கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, ஓட்டுனர், நடத்துனர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, கும்பகோணம் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மொபைல் பயன்படுத்த தடை (Banned from using mobile phones)
- ஓட்டுனர்கள், சட்டைப் பையில் மொபைல் போன் வைத்திருக்க கூடாது. அதை, நடத்துனர்களிடம் ஒப்படைத்து, பணி முடிந்த பின்னரே பெற வேண்டும்
- நடத்துனர், பகலில் முன் இருக்கையில் அமராமல், பஸ்சின் பின்புறம் கடைசி இடது பின் இருக்கையில் அமர்ந்து, இரண்டு படிக்கட்டுகளையும் கண்காணிக்க வேண்டும்
- தொலைதுார பஸ்களில், இரவு 11:00 மணியில் இருந்து, அதிகாலை 3:00 மணி வரை முன் இருக்கையில் அமர்ந்து, ஓட்டுனருக்கு துணையாக இருக்க வேண்டும்
- இந்த உத்தரவை மீறி ஓட்டுனர்கள் பணியின்போது, மொபைல் போன் பயன்படுத்தினாலோ, பகலில், ஓட்டுனருக்கு அருகில் அமர்ந்து நடத்துனர் பேசினாலோ, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த உத்தரவை, மற்ற போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்கள் ஏற்கனவே பிறப்பித்துள்ளதால், மீண்டும் இதே சுற்றறிக்கையை அனுப்பி, ஓட்டுனர், நடத்துனர்களை எச்சரிக்க உள்ளனர்.
மேலும் படிக்க
தமிழுக்கு முக்கியத்துவம்: அமெரிக்காவில் உதயமானது வள்ளுவர் தெரு!