News

Monday, 21 June 2021 04:42 PM , by: T. Vigneshwaran

தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் பேருந்து பயணம் தொடங்கிய நிலையில், பயணிகள் எந்த விதமான விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்ற நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நிலையில், லாக்டவுனில் தொடர்ந்து தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா வழக்குகள் குறைவாக இருக்கும் மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும், அதிகமாக உள்ள மாவட்டங்களில் குறிப்பிட்ட தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

பேருந்து

தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலும் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மாவட்டங்களில் கொரோனா வழக்குகள் குறைவாக இருந்ததாலும், பொருளாதார நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்பதால் இங்கு பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை

சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கமும் அனுமதிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி பேருந்துகளுக்கு அனுமதி இல்லை. 4 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து பயணம் தொடங்க உள்ள நிலையில், இங்கு மக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன என்று விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பேருந்தில் என்னென்ன விதிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

விதிமுறைகள்

அதன்படி பேருந்தில் பயணம் செய்யும் எல்லோரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க் இல்லை என்றால் அனுமதி இல்லை.

பேருந்தில் 50 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

2 பேர் அமரக்கூடிய இருக்கையில் 1 நபர் மட்டுமே அமர அனுமதி அளிக்கப்படும்.

வேக்சின்

இரண்டாம் அலை முடிந்துள்ள நிலையில், மூன்றாம் அலை தொடங்க வாய்ப்புள்ளதால் மக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை 85% ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு வேக்சின் போடப்பட்டுள்ள நிலையில், மீதம் உள்ளவர்களுக்கு விரைவில் போடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க:

TN Lockdown: தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்! காய்கறி, மளிகை கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே இருக்கும்!!

Lockdown : வீட்டில் இருப்பவர்களா நீங்கள்? அப்போ இந்த தகவல் உங்களுக்கு தான்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)