அரசுப் பேருந்துகளில் இனிமேல், பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் சிக்கிக் கொள்வார்கள். இதற்காக மாநகர பேருந்துகளில் அவசர உதவி அழைப்பு பொத்தான் (Butten) பொருத்தப்படுகிறது.
மாநகர பஸ்களில் விபத்து, திருட்டு சம்பவம் போன்றவை ஏதாவது நடந்தால் இந்த பொத்தானை அழுத்தினால் உடனடியாக அது தொடர்பான பிரச்சினைக்கு உதவி கிடைக்கும். சென்னை மட்டுமல்லாது மாநிலம் முழுவதும் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் திருட்டு சம்பவம், மாணவர்கள் ரகளையில் ஈடுபடுதல், சில்மிஷம் செய்தல் போன்ற சமூக விரோத செயல்கள் நடக்கின்றன.
2,500 பேருந்துகளில்
கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக்கொண்டு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க மாநகர ப் பேருந்துகளில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 2,500 மாநகர பேருந்துகளில் அவசர உதவி பொத்தான் மற்றும் கேமராக்கள் பொறுத்தப்பட உள்ளது.இது தவிர, பேருந்தில் பயணம் செய்யும்போது, விபத்தோ, மருத்துவ உதவியோ தேவைபட்டாலும் இந்த பொத்தானை அழுத்தலாம்.
அதே போல திருட்டு, சில்மிஷம் நடந்தாலும் உடனே பொத்தானை அழுத்தி உதவி கேட்கலாம். பொத்தானை அழுத்தியவுடன் அலாரம் அடிக்கும். பேருந்தில் நடக்கும் சம்பவத்தை உடனே அலாட்படுத்தும் வகையில் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கும். இத்தகைய வசதி முதல் கட்டமாக 500 பேருந்துகளில் செயல்படுத்தப்பட உள்ளது என்று மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.வழிப்பறி, திருட்டு என்றால் போலீசார் சம்பவ இடத்துக்கு வருவார்கள். இதற்காக பிரத்யேக கட்டுப்பாட்டு அறை தலைமை அலுவலகத்தில் நிறுவப்படுகிறது. அங்கு இருந்தவாறு கண்காணிப்பார்கள்.
ஒவ்வொரு பேருந்திலும் அவசர உதவி பொத்தான் 4-ம், கேமிரா 3-ம் நிறுவப்படுகிறது. இதன் மூலம் குற்றங்களை குறைக்க முடியும். பேருந்தில் எதாவது அசம்பாவிதம் நடந்தால் அதனை தடுக்க இது உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். மருத்துவ உதவி தேவைப்பட்டால் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வரும். சரி இந்த வசதி எப்போது பயன்பாட்டு வருகம் என்றால், இன்னும் 2 மாதத்தில் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க...
புற்றுநோய்க்கு வித்திடும் டால்கம் பவுடர்-ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!