நாட்டில் 20 ஆயிரம் மெகாவாட்ஸ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மாநிலங்களுக்கு இடையே எளிதில் விநியோகிக்கும் பசுமை மின் வழித்தட திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை குழு நேற்று ஒப்புதல் அளித்தது.
பசுமை மின் வழித்தடம் (Green power line)
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஒருங்கிணைத்து, அதை மாநிலங்களுக்கு இடையே விநியோகிக்க ஜி.இ.சி., எனப்படும் பசுமை மின் வழித்தடம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக காற்றாலை மற்றும் சூரிய சக்தியில் (Solar Power) இருந்து உற்பத்தியாகும் மின்சாரம், பசுமை மின் வழித்தடம் வழியாக விநியோகிக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக, தமிழகம், ஆந்திரா, குஜராத், ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் பசுமை மின் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் 24 ஆயிரம் மெகாவாட்ஸ் மின்சாரத்தை விநியோகிக்கப்பட உள்ளது. இதன் கட்டுமான பணிகள் இந்த ஆண்டிற்குள் முடிந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் இரண்டாவது கட்ட பணிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
20,000 MW மின்சாரம் (20,00 MW Electricity)
இதன்படி தமிழகம், குஜராத், ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பசுமை மின் வழித்தடம் கட்டமைக்கப்பட உள்ளது. 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின்கீழ், 20 ஆயிரம் மெகாவாட்ஸ் மின்சாரம் விநியோகிக்கப்பட உள்ளது.
இதன் கட்டமைப்பு பணிகள் தற்போது துவங்கப்பட்டு, 2025 - 26 நிதியாண்டிற்குள் முடிக்கப்பட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
டிஜிட்டல் மயமாகும் மின் துறை: ஸ்மார்ட் மீட்டர் திட்டம்!
மாதாந்திர மின்கட்டணம் விரைவில் அமலுக்கு வரும்: அமைச்சர் தகவல்!