நடப்பு நிதியாண்டின் காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைப்பெற்றது. இதில் 2021-22ம் ஆண்டில் காரீப் சந்தை பருவத்தின் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.
விவசாய பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு ஏற்ற விலையை உறுதி செய்வதற்காக காரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.72 உயர்வு
இதன்படி, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவின்டாலுக்கு, 72 ரூபாய் உயர்த்தப்படுகிறது. நெல் பொதுவான ரகத்தின் குறைந்தபட்ச ஆதார விலை குவின்டால் ஒன்றுக்கு ரூ.1868-லிருந்து ரூ.1940 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதல் ரக நெல்லின் விலை ரூ.1960 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
எள்ளுக்கு கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையை விட குவின்டால் ஒன்றுக்கு ரூ.452 அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. துவரை மற்றும் உளுந்துக்கு ரூ.300 அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிலக்கடலைக்கு குவின்டால் ஒன்றுக்கு ரூ.275 அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பல்வகை பயிர்கள் பயிரிடுவதை ஊக்குவிப்பதற்காக, வெவ்வேறான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இது போல் சோளம், ராகி, பாசிபயறு, சோயாபீன்ஸ், சூரியகாந்தி விதை, பருத்தி உட்பட பல பயிர்களின் விலையும் ஓரளவு உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
தோட்டக்கலை பயிர் சாகுபடியை அதிகரிக்க வேளாண் துறை செயலர் உத்தரவு
தேனியில் உரிய பருவத்தில் பாசன நீர்! உணவு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு
மண் மாதிரியை பரிசோதித்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு வேளாண் இயக்குநர் வேண்டுகோள்!