News

Friday, 01 January 2021 04:37 PM , by: Daisy Rose Mary

Credit : Pakissan.com

முதலாம் தலைமுறை எத்தனால் உற்பத்திக்காக, நாட்டில் எத்தனால் வடிதிறனை மேம்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சரவைக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது. இதில் பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாட்டில் சர்க்கரை உற்பத்தி 2010-11ம் ஆண்டு முதல் அளவுக்கு அதிகமாக உள்ளது. இனி வரும் ஆண்டுகளிலும், நாட்டில் சர்க்கரை உற்பத்தி கூடுதலாக இருக்கவே வாய்ப்புள்ளது.

எத்தனால் தயாரிப்பை அதிகரிக்க திட்டம்

அதனால் கூடுதல் கரும்பை எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்துவதுதான் சரியான வழியாகும். 2022ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 10% எத்தனாலை சேர்க்கவும், 2030ம் ஆண்டுக்குள் 20% எத்தனால் சேர்க்கவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தரமான எத்தானல் தயாரிப்பை அதிகரிப்பதற்காக, உணவு தானியங்களான அரிசி, கோதுமை, பார்லி, மக்காச்சோளம் மற்றும் சோளம், கரும்பு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்றவற்றிலிருந்து, முதல் தலைமுறை எத்தனால் உற்பத்தி செய்வதை அரசு ஊக்குவிக்கிறது.

முதல் தலைமுறை எத்தனால் உற்பத்தி

முதல் தலைமுறை எத்தனால் உற்பத்திக்கான வடிதிறனை மேம்படுத்துவதற்காக மாற்றியமைக்கப்பட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்காக புதிய இரட்டை உணவு தானிய வடிகட்டுதல் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. மேலும் ஏற்கனவே உள்ள கரும்புச்சாறு வடிகட்டுதல் மையங்கள், எத்தனால் தயாரிப்பு வடிகட்டுதல் மையங்களாக விரிவுபடுத்தப்படவுள்ளன. இதற்காக அதில் மூலக்கூறு சல்லடை நீரிழப்பு (எம்.எஸ்.டி.எச்) சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும்.

மானியத்துடன் கூடிய கடன் திட்டம்

இத்திட்டத்துக்காக வங்கியில் ஆண்டுக்கு 6 சதவீத வட்டியில் கடன் பெறும் போது, 5 ஆண்டு காலத்துக்கு வட்டி மானியம் மற்றும் ஓராண்டு காலம் கழித்து கடனை செலுத்தும் சலுகை அல்லது வங்கி வசூலிக்கும் வட்டியில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அதை அரசு ஏற்கும். தயாரிக்கப்படும் எத்தனாலில் 75 சதவீதத்தை, எண்ணெய் நிறுவனங்களுக்கு சப்ளை செய்பவர்களுக்கு மட்டுமே இந்த வட்டி சலுகை கிடைக்கும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

பொங்கலுக்கு இனிப்பு சேர்கும் வெல்லம்! தயாரிப்பு பணிகள் மும்முரம்!!

விவசாயிகள் போரட்டம் : மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!!

திலேப்பியா மீன் வளர்த்து லாபம் பார்க்கலாம் வாங்க!!

பால் முதல் நெய் வரை அனைத்திலும் லாபம் சம்பாதிக்கலாம் - பசு மாடு வளர்ப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)