கர்நாடக முன்னாள் முதல்வர், பாஜக மூத்த அரசியல்வாதியுமான எஸ்.எம் கிரிஷ்ணாவின் மருமகனும் மற்றும் கஃபே காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளருமான வி.ஜி. சித்தார்த்தா நேற்று முன் தினம் மாலை (திங்கள்கிழமை) மாயமானார்.
இதை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) அதிகாலை சித்தார்த்தாவின் சடலம் ஹோய்கேபஜார் நதிக்கரையில் கிடைத்துள்ளதாக தக்ஷின கன்னடா துணை கமிஷனர் எஸ்.செந்தில் கூறினார்.
தக்ஷின கன்னடா மாவட்டத்தில் உள்ள நேத்ராவதி பாலத்தில் காரை நிறுத்த கூறி தனது ஓட்டுனரிடம் சற்று நடந்து விட்டு வருவதாக சொல்லிச்சென்ற சித்தார்த்தா பலமணி நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதையடுத்து காவல் துறையில் ஓட்டுநர் அளித்த புகாரில் 200 க்கும் மேற்பட்ட போலீஸார், 25கும் மேற்பட்ட படகுகள் கொண்டு தேடுதலை தீவிர படுத்தினர்.
இதற்கிடையில், அவர் ஊழியர்களுக்கும், நிர்வாகக் குழுவினருக்கும் எழுதிய கடிதம் கிடைத்தது மற்றும் மீனவர் ஒருவர் அளித்த தகவலின் படி சித்தார்த்தா நீரில் குதித்து தற்கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது என்று, உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். நீரோட்டத்தின் அடிப்படையில் சடலம் எங்கு கரை ஒதுங்கும் என்ற தீவிர தேடுதலுக்கு பின் ஹோய்கேபஜார் பகுதியில் ஐஸ் கட்டி தயாரிப்பு தொழிற்சாலைக்கு அருகில் சித்தார்த்தாவின் சடலம் இன்று அதிகாலை கிடைத்துள்ளது.
சித்தார்த்தா காணாமல் போனதை கார் ஓட்டுநர் உறுதியாக கூறியதாலும், மீனவர் அளித்த தகவலின் படியும் போலீஸார் நடத்திய தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் சித்தார்த்தாவின் சடலம் கிடைத்துள்ளது.
k.Sakthipriya
krishi Jagran