பொங்கல் பரிசுத் தொகை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2023 பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர் பெரிய கருப்பன், அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். பொங்கல் பரிசுத் தொகையாக குடும்ப அட்டைதாரருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலோசனை கூட்டத்திற்கு பின் பொங்கல் தொகுப்பு மற்றும் பரிசுத் தொகை குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: