News

Sunday, 23 January 2022 05:14 PM , by: Elavarse Sivakumar

Sunday Curfew Update

கொரோனா பாதிப்புக் கட்டுக்கடங்காத நிலையில், தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு ரத்தாகுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பரமணியன் பதிலளித்துள்ளார். தொடர்ந்து அதிகரித்து வரும் மாநிலத்தின் ஒட்டு மொத்த தினசரி கொரோனா பாதிப்பு, நம்மை பதற்றத்தில் வைத்திருப்பது ஒருபுறம் என்றால், முழு ஊரடங்கு எப்போது ரத்தாகும் என்பது மறு உள்ள மிகப்பெரியக் கேள்வியாக உள்ளது. 

ஞாயிறு முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே சென்றதால் கடந்த 3 வாரங்களாக ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், சென்னையில் மட்டும் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்தில் இருந்து படிப்படியாக குறைந்து 6 ஆயிரம் என்ற நிலைக்கு வந்துள்ளது.

அமைச்சர் பதில் (The Minister replied)

இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளையொட்டி, சென்னையின் மெரினா கடற்கரையில் உள்ள நேதாஜி சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்ததப்பட்டது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பரமணியனிடம் ஊரடங்கு குறித்து கேள்வி எழுப்ப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருவது சற்று ஆறுதல் அளிப்பதாக தெரிவித்தார்.

முற்றுப்புள்ளி (End)

இந்தியா முழுவதும் பெருநகரங்களில் உள்ள கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், சென்னையிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது.
தொற்று எண்ணிக்கைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்பட்சத்தில், ஊரடங்கு தளர்த்தப்படும் எனக் கூறினார்.

புதிய உச்சம்

தொற்று எண்ணிக்கையை பொறுத்து வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பரமணியன் கூறினார்.

சென்னையில் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் அளிக்கும் வகையில் இருந்தாலும், மாநிலத்தின் ஒட்டு மொத்த பாதிப்பு அன்றாடம் புதிய உச்சத்தை அடைவது மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க...

10 நாட்கள் தனிமைப்படுத்துதல் போதாது - புதிய ஆய்வில் தகவல்!

கொரோனா 3வது அலை எப்போது Endcard போடும்? நிபுணர்கள் விளக்கம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)