News

Thursday, 01 September 2022 11:33 AM , by: R. Balakrishnan

Cancer Vaccine

பெண்களுக்கு மார்பகம், கருப்பை, கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் ஏற்படுதற்கான வாய்ப்புகள் உண்டு. இதில் கர்ப்பப்பை வாயில் தொற்று ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் போது கண்டுபிடித்துவிட்டால் புற்றுநோய் ஏற்படுவதை தடுத்துவிட முடியும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

புற்றுநோய் தடுப்பூசி (Cancer Vaccine)

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை வராமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி வழங்கப்படுகிறது. இந்த நாள் வரை, கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் அனுமதி வழங்கியது.

அதைத் தொடர்ந்து தடுப்பூசிக்கான சோதனைகள் செப்டம்பர் 2018-ம் ஆண்டில் இந்தியாவின் 12 இடங்களில் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் முடிந்த நிலையில், ஜூன் 8-ம் தேதியன்று தடுப்பூசி தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்தநிலையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசி இன்று அறிமுகம் செய்யப்படுகிறது.

மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தடுப்பூசியை அறிமுகம் செய்து வைக்கிறார். இந்த தடுப்பூசி மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு காரணமான ஹியூமன் பாப்பிலோமா நுண்கிருமி ஏற்படுவதை தடுக்க முடியும். இந்த தடுப்பூசி புற்றுநோய் தவிர்ப்பில் முக்கிய ஆயுதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

நல்ல ஆரோக்கியத்திற்கு தினம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் உணவுகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)