இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 4 June, 2022 7:05 PM IST
Construction

திருநெல்வேலி மாவட்டத்தில் குவாரிகள் இயங்காததால் கட்டுமான பொருட்களை அண்டை மாவட்டங்களில் இருந்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளோர், புதிதாக வீடு கட்டுவோர் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 55 கல்குவாரிகள், 25க்கும் மேற்பட்ட கிரசர்களும் செயல்பட்டு வருகிறது இவற்றிலிருந்து நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் 6000 முதல் 8000 டன் அளவிற்கு குண்டுக்கல், ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இங்கிருந்து ஏராளமான கனிமங்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தது .

இந்த நிலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி அடைப்பான் குளம் பகுதியில் உள்ள குவாரியில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறை இடிபாடுகளில் சிக்கி நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள குவாரிகள் அனைத்திலும் ஆய்வு செய்யப் போவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அனைத்து குவாரிகள் மற்றும் கிரசர்களில் விற்பனை நிறுத்தப்பட்டது . கனிம வள துறையின் உதவி இயக்குனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதனிடையே கனிமங்களை கொண்டு செல்வதற்கான நடை சீட்டு கொடுப்பது நிறுத்தப்பட்டது. 20 நாட்களை கடந்த நிலையிலும் இதே நிலை நீடிக்கிறது. அதிகாரிகளை கொண்டு குவாரிகளில் முறைகேடாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு இருக்கிறதா அல்லது அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே எடுக்கப்பட்டு இருக்கிறதா, அனுமதிக்கப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்டு இருக்கிறதா என்பது குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு முடிந்த நிலையிலும் நடை சீட்டு வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டுமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வேறுவழியின்றி அண்டை மாவட்டகளிலிருந்து கனிமங்களை வாங்கும் சூழ்நிலைக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்க கூடிய கட்டுமான தொழிலில் இருப்பவர்கள், புதிய வீடுகள் கட்டுபவர்கள் தள்ளப்பட்டனர். நாள்தோறும் 6,000 முதல் 8,000 டன் வரை கனிமங்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு தேவைப்படும் சூழலை அறிந்த அண்டை மாவட்டங்களில் உள்ள குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் விலையை 30% உயர்த்தினர்.

தேவை அதிகமாக உள்ள எம் சாண்ட் விலை டன் ஒன்றுக்கு 150 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. உற்பத்தியை விட தேவை அதிகமாக இருப்பதாலும் கிரசர்களில் லாரிகள் நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதால் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 30 சதவீத அளவில் கனிமங்களின் விலை உயர்ந்து இருக்கும் நிலையில் அதனை கொண்டுவர பயன்படுத்தும் லாரிகளின் வாடகையும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதிக தூரத்தில் இருந்து கனிமங்கள் கொண்டு வரப் படுவதால் வாடகை உயர்த்தப்படுவதாக கூறும் நிலையில் 3 யூனிட் எம் சாண்ட் வாங்கும் போது 4000 முதல் 5000 வரை கூடுதல் தொகை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க

pan card-உடன் ஆதார் இணைக்கவில்லை என்றால் அபராதம்- விவரம்

English Summary: Can't build a house anymore? 40% increase in the price of construction materials
Published on: 04 June 2022, 07:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now