தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில், பள்ளிகல்வித் துறையில் மொத்தம் 152 காலி பணியிடங்கள் உள்ளன.
விருப்பமுள்ள பட்டம் பெற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மாத சம்பளமாக ரூ.32 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு (Job Offer)
Senior Fellows மற்றும் Fellows பணிகளுக்கு மொத்தம் 152 காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் கிடையாது என்றும் தேர்வு நேர்காணல் வழியாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் வருகிற 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற காலகெடு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு tnschools.gov.in என்ற இணையதளத்தை பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகல்வித்துறையின் இந்த அறிவிப்பை பயன்படுத்திக் கொண்டு வருகிற 15ம் தேதிக்குள் விண்ணப்பித்து இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
பி.டெக்., படித்தவரா நீங்கள்? உங்களுக்கு தான் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு!
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்க மறக்காதிர்கள்!