News

Monday, 17 October 2022 09:55 AM , by: Elavarse Sivakumar

தீபாவளிப் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு, அரிசி, சர்க்கரைக்கு பதில் பணம் வழங்கப்படும் என இந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தத் தொகை அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு புதுவை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரைக்கான பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் கூறியதாவது:-புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கான பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.பாப்ஸ்கோ நிறுவனம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு சிறப்பு அங்காடியை திறந்து மளிகை பொருட்கள் மற்றும் பட்டாசுகள் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.12 கோடி

கடந்த ஆண்டு சுமார் ரூ.11 கோடி அளவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.12 கோடி அளவுக்கு விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட 25 பொருட்கள் இந்த ஆண்டு மிகவும் மலிவு விலையில் கொடுக்கப்படுகிறது. இந்தத் தொகுப்பு 800 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

தள்ளுபடி விலைவில் பட்டாசு

பட்டாசு அதன் விலையில் இருந்து 50 சதவீதத்துக்கும் மேல் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பாப்ஸ்கோ நிறுவனத்துக்கு அரசு சார்பில் ரூ.3.5 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கான்பெட் நிறுவனம் மூலமும் மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்படுகிறது.


விலைஏற்றம் கிடையாது

பாப்ஸ்கோ, கான்பெட் நிறுவனங்கள் மூலம் பல இடங்களில் சிறப்பு அங்காடிகள் திறக்கப்பட்டிருப்பதால் மக்களுக்கு எளிமையாக பொருட்கள் கிடைப்பதுடன், விலையேற்றமும் கட்டுப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

அரசு ஊழியர்களுக்கு 10% போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு!

வட்டியை உயர்த்திய வங்கி- வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)