தமிழக காவிரி (Cauvery) டெல்டா பகுதிகளில் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 24ம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். மேலும், சுதந்திரத்திற்கு பின், முதல் முறையாக மே மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. அந்த வகையில், இன்று மற்றொரு அணையில் தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை (Kallanai) கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து, இன்று தண்ணீரை திறந்து விட பொதுப்பணித்துறை முடிவு செய்திருப்பது குறிப்பிடதக்கது.
கல்லணை திறப்பு நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் பங்கேற்க உள்ளதாக தஞ்சை நீர்வளத்துறை அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: தமிழ்நாடு CM பெல்லோஷிப் 2022-24: 50000 ரூபாய் வரை உதவித் தொகை, விண்ணப்பப் படிவம், தகுதி! அறிந்திடுங்கள்!
கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுவதால் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டுகின்றனர். மேலும், இதனால் 4 லட்சம் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்று குறிப்பிடப்படுகிறது.
மேலும் படிக்க:
தமிழகத்தில் 28,540 கோடி ரூபாய் செலவில் 6 சிறப்பு திட்டங்கள்- பிரதமர் மோடி
7th Pay Commission: ஊழியர்களுக்கு ஜூலை மாத ஊதியத்தில் பம்பர் ஏற்றம்