நாடு முழுவதும் கொரோனாத் தொற்றுப்பரவல் 2வது அலை காரணமாக, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு (Curfew)
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக 1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
ரத்தாகுமா என எதிர்பார்ப்பு (Expectation to be canceled)
சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது.
தேர்வு ஒத்திவைப்பு (Postponement of examination)
கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமடைந்ததை அடுத்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்தது. அதேநேரத்தில் பிளஸ் 2 தேர்வுகளை ஒத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு (Case in the Supreme Court)
எனினும் கொரோனாத் தொற்று பரவல் பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வந்த நிலையில், ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆலோசனைக் கூட்டம் (Consultative meeting)
இதனைத் தொடர்ந்து, இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமித்ஷா, பிரகாஷ் ஜவ்டேகர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பொதுத்தேர்வை நடத்த மாற்று வழி உண்டா என்பது குறித்தும், மாநிலங்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ கருத்துக்களையும், பிரதமர் ஆய்வு செய்தார்.
பொதுத்தேர்வு ரத்து (Cancel the general election)
கூட்டத்தின் முடிவில், கொரோனா சூழல் மற்றும் மாணவர்களின் உடல் நலம் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு,12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து 12 வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் ரத்து ஆகுமா? (Will it be canceled in Tamil Nadu too?)
சிபிஎஸ்சி 12 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
மேலும் படிக்க...
ரேஷன் பொருட்களை பெற இன்று முதல் டோக்கன் விநியோகம் தொடக்கம்!!
கொரோனா வைரஸ்ஸை ஒழிக்கும் கத்திரிக்காய் சொட்டு மருந்து- ஆந்திர அரசு அனுமதி!
8 ஆசிய சிங்கங்களுக்கும் கொரோனா- தனி கூண்டில் தனிமைப்படுத்தப்பட்டன!