சி பி எஸ் இ பொது தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டது. கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தேர்வு தொடங்கியது. இந்தியாவில் மொத்தம் 4,974 தேர்வு மையங்களிலும், வெளிநாடுகளில் 78 தேர்வு மையங்களிலும் இந்த பொதுத்தேர்வானது நடத்தப்பட்டது. மே 3 ஆம் வாரத்தில் முடிவுகள் வருமென கூறிய நிலையில் முதல் வாரத்திலே வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதிலுமிருந்து சுமார் 13 இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 7,48,498 மாணவர்கள் 5, 38,861 மாணவர்கள் எழுதி இருந்தனர். மேலும் இந்த தேர்வினை மூன்றாம் பாலினத்தவர் என பல பிரிவினரும் எழுதி இருந்தனர்.
சி பி எஸ் இ தேர்ச்சி விகிதம் இந்தாண்டு 83.4% ஆகும். முதல் இடத்தினை இரண்டு மாணவிகள் பகிர்ந்து கொண்டனர். உத்திர பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவிகள் 499 மதிப்பெண் எடுத்து இந்தியாவில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
மண்டல அளவில் திருவனந்தபுரம் முதலிடம் பெற்றுள்ளது. இங்கு தேர்ச்சி விகிதமானது 98.2 % ஆகும். அடுத்த இரண்டு இடத்தினை சென்னை மற்றும் புது டெல்லி பெற்றுள்ளது.
மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவினை cbse.nic.in, cbseresults.nic.in என்ற இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் .